உலகம்

தாங்க முடியாத அளவுக்கு கொடுமை இழைக்கும் ரஷ்ய படை- உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி குற்றச்சாட்டு

தாங்க முடியாத அளவுக்கு கொடுமை இழைக்கும் ரஷ்ய படை- உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி குற்றச்சாட்டு

JustinDurai

உக்ரைனின் துறைமுக நகரமான மரியூபோலில், ரஷ்ய படைகள் தாங்க முடியாத அளவுக்கு கொடுமைகளை இழைத்திருப்பதாக அந்நாட்டின் அதிபர் செலன்ஸ்கி குற்றம்சாட்டியுள்ளார்.

போர்ச்சுகல் நாடாளுமன்றத்தில் காணொளி மூலம் பேசிய செலன்ஸ்கி, ரஷ்ய படையெடுப்பிடம் இருந்து உக்ரைன் மக்களை காக்க வேண்டுமெனில், தங்களுக்கு கூடுதல் ஆயுதங்களை வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். போரை முடிவுக்கு கொண்டு வர, ரஷ்யா மீது கூடுதல் தடைகளை மேற்கத்திய நாடுகள் விதிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

உக்ரைனின் மரியூபோல் நகரில் ரஷ்ய படைகள் தாங்க முடியாத அளவுக்கு பல கொடுமைகளை இழைத்திருப்பதாகவும் குற்றச்சாட்டினார். அதே நேரம் அது தொடர்பான உறுதியான ஆதாரங்களை செலன்ஸ்கி வெளியிடவில்லை. இதற்கிடையே, மரியூபோல் மக்களின் உயிர் புடினின் கைகளில் தான் இருப்பதாக அந்நகர மேயரும் தெரிவித்துள்ளார். போரை நிறுத்தி மக்களை காப்பாற்ற வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதையும் படிக்க: உக்ரைனின் மரியுபோல் நகரம் விடுதலை பெற்று விட்டது - ரஷ்ய அதிபர் புடின்