உலகம்

உக்ரைன் போர் எதிரொலி: சரிந்தது இந்திய முதலீட்டாளர்களின் பங்கு மதிப்பு

உக்ரைன் போர் எதிரொலி: சரிந்தது இந்திய முதலீட்டாளர்களின் பங்கு மதிப்பு

கலிலுல்லா

உக்ரைன் - ரஷ்யா போரின் காரணமாக இந்தியாவில் முதலீட்டாளர்களின் பங்கு மதிப்பு உக்ரைன் நாட்டின் பொருளாதார மதிப்பை விட அதிகமாக சரிந்துள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்துவதன் காரணமாக இந்தியப் பங்குச் சந்தைகள் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து சரிந்தது. உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்திய அன்று சென்செக்ஸ் சுமார் 3 ஆயிரம் புள்ளிகள் வீழ்ச்சி கண்டது. நேற்று சென்செக்ஸ் 1.40 சதவிகிதம் சரிந்து 54 ஆயிரத்து 333 புள்ளிகளில் நிறைவடைந்தது. நிஃப்டி 1.53 சதவிகிதம் குறைந்து 16 ஆயிரத்து 245 புள்ளிகளில் முடிவடைந்தது. குறிப்பாக, உக்ரைன் எல்லையில் ரஷ்யா படைகளை நிறுத்தத் தொடங்கிய பிப்ரவரி 16ஆம் தேதி முதலே பங்குச் சந்தைகள் குறையத் தொடங்கின.

அன்றிலிருந்து நேற்று வரை சென்செக்ஸ் சுமார் 5 ஆயிரம் புள்ளிகள் வீழ்ச்சி கண்டுள்ளது. எனவே, முதலீட்டாளர்களின் பங்கு மதிப்பு சுமார் 15 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு சரிந்துள்ளது. இது கடந்த 2021ஆம் ஆண்டு உக்ரைன் நாட்டின் பொருளாதார மதிப்பான 13 லட்சத்து 60 ஆயிரம் கோடி ரூபாயை விட அதிகமாகும்.