2021ஆம் ஆண்டு உலகம் முழுவதும் 488 ஊடகவியலாளர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரை தலைமையிடமாக கொண்டு செயல்படும், ரிப்போர்ட்டர்ஸ் வித்அவுட் பார்டர்ஸ் என்ற அமைப்பு, இந்த அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. பணியின் நிமித்தம் அதிக அளவு ஊடகவியலாளர்கள் கைது செய்யப்பட்டது 2021ஆம் ஆண்டில்தான் என்பதும் தெரியவந்துள்ளது.
127 ஊடகவியலாளர்களை கைது செய்ததன்மூலம் சீனா முதலிடத்திலும், 53 பேரை கைது செய்த மியான்மர் 2ஆவது இடத்திலும் 43 பேரை கைதுசெய்த வியட்னாம் 3ஆவது இடத்திலும் உள்ளன. உலக நாடுகளின் இந்த நடவடிக்கை, சர்வாதிகார போக்கின் பிரதிபலிப்பு என ரிப்போர்ட்டர்ஸ் வித்அவுட் பார்டர்ஸ் அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.