உலகம்

"ஊழல் ஒழிந்தால்தான் மாஸ்க் அணிவேன்" மெக்சிகோ அதிபர் அதிரடி !

jagadeesh

நாட்டில் ஊழல் ஒழிந்தால் மட்டுமே நான் மாஸ்க் அணிவேன் என்று மெக்சிகோ நாட்டு அதிபர் லோபஸ் ஓபரேடர் தெரிவித்துள்ளார்.

உலகெங்கிலும் கொரோனா வைரஸ் தாக்கம் வேகமாக அதிகரித்து வருகிறது. கொரோனா வைரஸில் இருந்து பாதுகாத்து கொள்ள அனைத்து நாடுகளிலும் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டது. அமெரிக்கா கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டபோதும் பலர் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மாஸ்க் இல்லாமல்தான் வெளியே வலம் வந்தார்.

ஆனால் தொடர்ந்து வந்த விமர்சனம் காரணமாக ட்ரம்ப் மாஸ்க் அணியத் தொடங்கினார். இந்நிலையில் மெக்சிகோ நாட்டின் அதிபர் லோபஸ் ஓபரேடர் பேசுகையில் "நாம் ஒரு ஒப்பந்தம் போடுவோம். இந்த நாட்டில் ஊழல் விரைவாக ஒழிக்கப்பட வேண்டும். அப்போதுதான் நான் மாஸ்க் அணிவேன். பொருளாதாரம் மேம்பட மாஸ்க் ஒரு காரணமாக இருந்தால் அதை உடனே அணியவும் தயாராக இருக்கிறேன்" என தெரிவித்துள்ளார்.