உலகம்

"நான் வாக்களித்த நபரின் பெயர் ட்ரம்ப்": டொனால்டு ட்ரம்ப்

"நான் வாக்களித்த நபரின் பெயர் ட்ரம்ப்": டொனால்டு ட்ரம்ப்

webteam

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளராக தற்போதைய அதிபர் டொனால்டு ட்ரம்ப் போட்டியிடுகிறார். ஜனநாயகக் கட்சி வேட்பாளராக ஜோ பிடன் போட்டியிடுகிறார். நவம்பர் 3 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றாலும், அதற்கு முன்பே வாக்களிக்கும் நடைமுறை அமெரிக்காவில் கடைபிடிக்கப்படுகிறது.

தேர்தல் நாளன்று மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். அதனால் வாக்காளர்கள் வரிசையில் காத்திருப்பதைத் தவிர்க்கவே வாக்குப்பதிவு நாளுக்கு முன்பே வாக்களிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டது. தற்போது புளோரிடா மாகாணத்தில் டொனால்டு டிரம்ப் வாக்களித்துள்ளார்.

தேர்தல் பிரச்சாரத்துக்காக புளோரிடா மாகாணத்துக்கு சென்ற ட்ரம்ப், தன் குடியிருப்புக்கு அருகிலுள்ள வெஸ்ட் பாம் பீச் வாக்குச்சாவடியில் தனது வாக்கைப் பதிவு செய்தார். அப்போது அவர் முகக்கவசம் அணிந்திருந்தார். எப்போதும் நியூயார்க் நகரில் வாக்களிக்கும் அவர், கடந்த ஆண்டில் தன்னுடைய வசிப்பிடத்தை புளோரிடாவுக்கு மாற்றியதால் குடியிருப்புக்கு அருகிலேயே வாக்களித்தார்.

பின் செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், "நான் வாக்களித்த நபரின் பெயர் ட்ரம்ப்" என்று வேடிக்கையாகக் குறிப்பிட்டார். மேலும், "அஞ்சலில் வாக்களிப்பதைவிட நேரில் வந்து வாக்களியுங்கள். இது ரொம்பவே பாதுகாப்பானது. இதை என்னால் உறுதியாகச் சொல்லமுடியும். அனைத்தும் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது" என்றார்.