உலகம்

மாத்துவோம்ல: அப்ப சேரி, இப்ப டூரிஸ்ட் ஸ்பாட்!

மாத்துவோம்ல: அப்ப சேரி, இப்ப டூரிஸ்ட் ஸ்பாட்!

Rasus

குடிசை பகுதியாக விளங்கிய கிராமம் ஒன்று இப்போது சுற்றுலாத் தளமாக மாறியிருப்பது அந்தப் பகுதி மக்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

இந்தோனேஷியாவில் சேரிப்பகுதியாக விளங்கிய கிராமம், கம்பங் பிளாங்கி. இந்த கிராமம் எப்போதும் குப்பையாகவே காட்சியளிக்கும். இந்தப் பகுதியை சேர்ந்த 54 வயது ஆசிரியரான ஸ்லாமத் விடோடோ என்பவருக்கு கிராமத்தை மாற்ற வேண்டும் என்று ஆசை. இதையடுத்து தன் திட்டத்தை செயல்படுத்த நினைத்தார். கிராமத்தில் உள்ள அனைவரையும் கூட்டி ஊரை வண்ணமயமாக மாற்றும் ஆலோசனையைச் சொன்னார். அவர்கள் ஏற்றுக்கொண்டனர். ஒவ்வொருவரும் தங்களுக்குப் பிடித்த வண்ணங்களில் வீடுகளுக்கு பெயின்ட் அடித்தனர். இதையடுத்து அந்த பகுதியை பார்க்கவே வித்தியாசமாக இருந்தது. இதற்காக இந்திய மதிப்பின்படி சுமார் 15 லட்சம் ரூபாய் செலவிட்டுள்ளனர். புதுப்பொலிவுடன் காட்சியளிக்கும் கம்பங் பிளாங்கி கிராமத்துக்கு வானவில் கிராமம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இது இப்போது திடீர் சுற்றுலாத் தலமாக மாறியுள்ளது.