உலகம்

`ஆசையா மலை உச்சிக்கு கூட்டிட்டுபோய்...’ நிறைமாத கர்ப்பிணிக்கு கணவரால் நேர்ந்த கொடூரம்!

`ஆசையா மலை உச்சிக்கு கூட்டிட்டுபோய்...’ நிறைமாத கர்ப்பிணிக்கு கணவரால் நேர்ந்த கொடூரம்!

JananiGovindhan

காப்பீடு பணத்தை பெறுவதற்காக எந்த எல்லைக்கு செல்வார்களா என்ற நாம் நினைக்கும் அளவுக்கு சில நேரங்கள் குரூரங்கள் நடக்கும். உண்மையென்றாலும்கூட, அந்த குரூரங்களை கேட்கையிலேயே நம் உள்ளம் பதைபதைக்கும். அப்படியான ஒன்றுதான் இதுவும். இன்ஷுரன்ஸ் பணத்தை பெறுவதற்காக நிறைமாத கர்ப்பிணி மனைவியை மலையில் இருந்து தள்ளிவிட்டு கொன்ற சம்பவம் துருக்கி நாட்டில் ஒரு அத அரங்கேறியிருக்கிறது.

துருக்கியின் முக்லா என்ற பகுதியில் உள்ள பட்டர்ஃப்ளை பள்ளத்தாக்குக்கு 41 வயதான ஹகன் அய்சல் என்பவர் தனது 32 வயதான மனைவி செம்ரா அய்சலுடன் கடந்த 2018ம் ஆண்டு ஜூன் மாதம் செம்ன்றிருக்கிறார்.

அப்போது ஏழு மாதம் கர்ப்பிணியாக இருந்திருக்கிறார் செம்ரா அய்சல். சுற்றுலாவுக்கான சென்றிருந்த போது ஹகன், செம்ராவை 1000 அடி உயரத்தில் இருக்கும் பகுதிக்கு செல்ஃபி எடுப்பதற்காக அழைத்துச் சென்றிருக்கிறார்.

அந்த சமயத்தில் திட்டம் போட்டு எவரும் அருகே இல்லாத நேரமாக பார்த்து நிறைமாத கர்ப்பிணியான மனைவி செம்ராவை 1000 அடி உயர மலையில் இருந்து கீழே தள்ளி கொன்றிருக்கிறார் ஹகன்.

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் ஹகன் அய்சலை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியிருக்கிறார்கள். வழக்கு விசாரணையின் போது செம்ராவிற்கு உயரத்தை கண்டால் பயப்படுவார் என நன்றாக தெரிந்திருந்தும் ஹகன் அய்சல் மனைவியை மலையில் இருந்து தள்ளி கொன்றிருக்கிறார் என ஊர்ஜிதமானது.

இதுபோக ஏன் இந்த கொலையை செய்தார் என்பது குறித்து அறிந்து நீதிபதிகளே அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள். ஏனெனில் மனைவி செம்ரா பெயரில் உள்ள இன்ஷுரன்ஸ் பணமான 25,000 டாலர் அதாவது 20 லட்சத்து 72 ஆயிரம் ரூபாயை பெறுவதற்காக ஹகன் இப்படியான கொடூர செயலை செய்திருக்கிறார் என்பது தெரிய வந்திருக்கிறது.

ஆனால் முதலில் தனது மனைவியை தான் கொல்லவில்லை என்று தொடர்ந்து சாதித்து வந்திருக்கிறார். இருப்பினும் குற்றம் நிரூபனமானதால் சிறையில் அடைக்கப்பட்ட ஹகனிற்கு தற்போது வாழ்நாள் சிறை தண்டனை அளிக்கப்பட்டிருக்கிறது. இதன் பிறகு ஹகன் அய்சல் விடுதலை ஆவதற்கு 30 ஆண்டுகளாக தேவைப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.