உலகம்

மரியா புயல் பாதிப்பில் இருந்து மீண்டு வரும் போர்டோ ரிகோ

webteam

மரியா புயலால் பாதிப்படைந்துள்ள போர்டோ ரிகோவில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

இர்மா புயலை தொடர்ந்து, அட்லாண்டிக் கடலில் உருவான மரியா புயலால் கரீபியன் தீவு நாடுகளில் பலத்த சேதம் ஏற்பட்டது. குறிப்பாக போர்டோ ரிகோ முற்றிலும் பாதிப்படைந்து பெரும்பாலான மக்கள் வீடுகளை இழந்து தவித்தனர். அவர்களுக்கு உணவு, நீர் உள்ளிட்ட வாழ்வாதாரப் பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை வழங்குவதில் அமெரிக்க அரசு மெத்தனமாக செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதைத்தொடர்ந்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தற்போது முழு வீச்சில் தொடங்கப்பட்டுள்ளன. தேவையான குடிநீர், உணவுப் பொருட்களை அமெரிக்க கடற்படையினர் பொதுமக்களுக்கு விநியோகித்து வருகின்றனர்.