உலகம்

193 கி.மீ வேகத்தில் காற்று... நெருங்குகிறது 'இர்மா'!

193 கி.மீ வேகத்தில் காற்று... நெருங்குகிறது 'இர்மா'!

webteam

இர்மா புயல் அச்சுறுத்தல் காரணமாக அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதுகாப்பு முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். 

பாதிப்பு ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள மக்கள் உடனடியாக முகாம்களை நாடிச் செல்லுமாறு மாகாண ஆளுநர் ரிக் ஸ்காட் கேட்டுக்கொண்டுள்ளார். மியாமி மற்றும் ப்ரோவார்டு பகுதிகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இர்மா, ஃப்ளோரிடாவைக் கடக்கும் போது மணிக்கு சுமார் 193 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

கியூபாவின் வடகிழக்குப் பகுதியில் இர்மா காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. கியூபாவில் தாக்கத்தை ஏற்படுத்திய பின் இர்மா சற்று வலு குறைந்ததாகக் கருதப்பட்டாலும், மீண்டும் அது வலுவடையக்கூடும் என அமெரிக்க தேசிய புயல் எச்சரிக்கை மையம் அறிவித்துள்ளது. 
தற்போது பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும், வளர்ப்புப் பிராணிகளுடன் பொதுமக்கள் முகாம்களை நோக்கி நகர்ந்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.