video image instagram
உலகம்

கனடா| பகுதி நேர வேலைக்காக காஃபி ஷாப் முன்பு நீண்ட வரிசையில் காத்திருக்கும் வெளிநாட்டு மாணவர்கள்!

கனடாவில், வேலைவாய்ப்புக்காக நூற்றுக்கணக்கான மாணவர்கள் வரிசையில் நிற்கும் காணொலி ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி வருகிறது.

Prakash J

அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா உள்ளிட்ட நாடுகளுக்கு படிக்கச் செல்லும் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. காரணம், அங்கு படிப்புடன் வேலைவாய்ப்பும் வழங்கப்படுவதுதான். இதனால், இந்திய மாணவர்களின் வருகையும் அந்நாடுகளில் அதிகரித்து வருகிறது. அதேநேரத்தில், அந்நாடுகளில் படிப்பிற்காக செய்யப்படும் செலவும் அதிகமாக இருப்பதால், படிப்பு நேரம் போக, மீதி நேரத்தில் வேலை பார்த்து வருகின்றனர்.

அதன்மூலம் வருமானத்தையும் பெற்று, தன்னுடைய தேவைகளை நிறைவேற்றிக் கொள்கின்றனர். இந்த நிலையில், கனடாவில் காபி ஷாப் ஒன்றில் பகுதி நேர வேலைக்காக மாணவர்கள் வரிசையில் காத்திருக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிக்க: செருப்பால் அடித்த பவித்ரா.. கொலையை மறைக்க ரூ.40 லட்சம் கடன் வாங்கிய தர்ஷன்.. விசாரணையில் புது தகவல்!

அந்த வீடியோவில், கனடாவின் பிரபல உணவகமான டிம் ஹார்டனில் (Tim Hortonss) வேலைவாய்ப்புக்காக நூற்றுக்கணக்கான மாணவர்கள் வரிசையில் நிற்கின்றனர். பல மணி நேரம் வரிசையில் நிற்பவர்களிடம் உணவக ஊழியர்கள், அவர்களது விண்ணப்பங்களை வாங்கிக்கொண்டு பிறகு அழைப்பதாகக் கூறி அனுப்பிவிடுகின்றனர். இந்த வீடியோதான் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோ குறித்து பலரும் தங்களது கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். அதில் ஒரு பயனர், ‘பல இடங்களில் வேலைவாய்ப்புக்காகச் சென்றதாகவும், எங்கு வேலை கிடைக்கும் என்று தெரியவில்லை, இது எனது போராட்டம் நிறைந்த நாள்’ என்றும் குறிப்பிட்டுள்ளார். இன்னொரு பயனர், ’கனடாவில் தேவையற்ற நெரிசல் காரணமாக, பிழைப்புக்கு வேலை தேடுவது கிட்டத்தட்ட சாத்தியமற்றதாக உள்ளது’ எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: தொடர் தோல்வி|Match Fixing நடந்ததா? பாபர் அசாம் சொத்து சேர்த்தது எப்படி? பாக். செய்தியாளர் கேள்வி?