உலகம்

தெரியுமா? மோப்ப சக்தியில் நாய்களை விட மனிதர்களே சிறந்தவர்கள்

தெரியுமா? மோப்ப சக்தியில் நாய்களை விட மனிதர்களே சிறந்தவர்கள்

webteam

நாய்கள், சுண்டெலி, முஞ்சூறு மற்றும் சுறா போன்ற பாலூட்டிகளை விட மனிதர்களுக்கு மோப்ப சக்தி குறைவு என்று கூறப்பட்டு வந்தது. ஆனால் அந்த உயிரினங்களை விட மனிதர்களுக்கு மோப்ப சக்தி அதிகம் என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் மயாமியில் உள்ள ரட்சர்ஸ் பல்கலைக்கழக நரம்பியல் ஆராய்ச்சியாளர் ஜான் பி மெக்கன் மோப்ப சக்தி குறித்து ஆய்வு மேற்கொண்டார். ஆராய்ச்சியில் நாய், சுண்டெலி உள்ளிட்ட மற்ற விலங்குகளை விட மனிதர்களுக்கு மோப்ப சக்தி அதிகம் என கண்டுபிடித்துள்ளார். பொதுவாக மனிதர்கள் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாசனைகளை நுகர்ந்து அவற்றை சரியாக நினைவுகூற முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இத்தகவலை அறிவியல் இதழில் வெளியிடப்பட்டுள்ளது. 1879 ஆம் ஆண்டில் விஞ்ஞானி புரோகா இதுகுறித்து ஒருஆய்வு கட்டுரை வெளியிட்டார். அதில் மற்ற விலங்குகளை விட மனிதர்களுக்கு மோப்ப சக்தி குறைவு என்று தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.