உலகம்

பிரிட்டனில் 9 நாள்களில் உருவாக்கப்பட்ட பிரமாண்ட மருத்துவமனை !

பிரிட்டனில் 9 நாள்களில் உருவாக்கப்பட்ட பிரமாண்ட மருத்துவமனை !

jagadeesh

பிரிட்டனில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க 9 நாள்களில் தற்காலிகமாக உருவாக்கப்பட்ட பிரமாண்ட மருத்துவமனை திறக்கப்பட்டது.

பிரிட்டனில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பாதிப்பால், நோயாளிகளை தனிமைப்படுத்துவதற்கு இடமில்லாமல் அந்நாட்டு அரசு திணறி வருகிறது. இதனையடுத்து, பர்மிங்ஹாம், லண்டன் மற்றும் மான்செஸ்டர் ஆகிய பகுதிகளில் தற்காலிக மருத்துவமனைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

டாக்லேண்ட்ஸ் மாவட்டத்திலுள்ள எக்செல் கண்காட்சி மையம் அந்நாட்டு ராணுவத்தினரின் முயற்சியால் பிரமாண்ட மருத்துவமனையாக மாறியுள்ளது. 87 ஆயிரத்து 328 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட எக்செல் மையமானது 9 நாட்களில் 4000 படுக்கைகள் கொண்ட பிரமாண்ட மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது.

மொத்தம் 80 வார்டுகளை கொண்ட இந்த மருத்துவமனையில், ஒவ்வொரு வார்டுகளிலும் 42 படுக்கைகள் உள்ளன. இங்கு செயற்கை சுவாசம், வென்டிலேட்டர்கள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் உள்ளன. இந்த மருத்துவமனையில் சுமார் 16 ஆயிரம் மருத்துவப் பணியாளர்கள் பணியாற்றவுள்ளனர்.

நாள் ஒன்றுக்கு 200 ராணுவ வீரர்கள் இரவு பகலாக பாடுபட்டு இந்த மருத்துவமனையை உருவாக்கியுள்ளனர். 24 மணிநேரமும் மருத்துவமனைக்கு மின்சாரம் தேவை என்பதால் எக்செல் மையத்தின் மின் உள்கட்டமைப்பும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. கொரோனாவின் பிடியிலிருந்து எப்படியாவது மக்களை மீட்க வேண்டும் என முழுவீச்சில் பிரிட்டன் செயல்படுவதற்கு இந்த மருத்துவமனையே ஓர் சான்று