Yasser Arafat file image
உலகம்

’பொலோனியம்210’ கொலை செய்யப்பட்டாரா பாலஸ்தீனர்களின் நம்பிக்கை நாயகன் 'யாசர் அராஃபத்'? தொடரும் மர்மம்!

யுவபுருஷ்

2004வது வருஷம் தன்னோட இறப்பால், ஒட்டுமொத்த பாலஸ்தீனத்தையும் கண்ணீர் கடல்ல மூழ்கவச்ச யாசர் அராபத், 1929வது வருஷம் ஜெருசுலேம்ல பொறந்தாரு. அதத்தொடர்ந்து காஸாவுல வளர்ந்த அராபத், 1940கள்ல மறுபடியும் ஜெருசுலேமுக்கு போனாரு. 1948 - 49களுக்கு இடையில நடந்த போர்ல, ஜெருசுலேம்ல இருந்து ஒரு அகதியா காஸாவுக்கு கடத்தப்பட்டாரு அராபத். தன்னோட பதின் பருவத்துலயே பாலஸ்தீன மாணவர் கூட்டமைப்புல சேர்ந்த அராபத், 1952ல பாலஸ்தீன மாணவர் கூட்டமைப்போட தலைவரா மாறினாரு.

அராபத் இஸ்லாம் மதத்துல பற்றுகொண்டவர்தான். ஆனா மதவாதி இல்ல அப்டின்னுதான் சொல்லணும். எகிப்துல பொறியியல் படிப்ப முடிச்ச இவரு, அந்த நாட்டோட ராணுவத்துல ஒரு வெடிமருந்து நிபுணரா பணியாற்றத் தொடங்கினாரு. ஆனா, அந்த நாட்டு அரசியல்ல ஈடுபட்டதா அங்க இருந்து வெளியேற்றப்படுறாரு அராஃபத். அதுக்கு அப்புறம்தான், தன்னோட நண்பர்களோட சேர்ந்து பாலஸ்தீன விடுதலை இயக்கமான ஃபதாவ 1959ம் ஆண்டு தொடங்கினாரு அராஃபத்.

1962ல அல்ஜீரியாவுக்கு பயணம் செஞ்ச அராஃபத், அங்க இருந்த விடுதலைப் போராட்டக்காரங்க கொரில்லா போர் முறைய கையால்றத பார்த்தபிறகு, நம்மலோட பதாவும் இந்த முறைய பாலஸ்தீனத்த மீட்கணும்னு முடிவு பண்றாரு. 1964ல அரபு நாடுகள ஒருங்கிணச்சு தனி நாடு உருவாக்கணும்ன்ற நோகத்துல PLO அப்டின்ற அமைப்பு தொடங்கப்படுது.

அந்த இயக்கத்தோட பாலஸ்தீன தலைவரா அராபத் 1969ல நியமிக்கப்பட்டரு. இதற்கிடையில 1965ல ஆயுதம் தாங்கிய போராட்டத்த இஸ்ரேலுக்கு எதிரா தொடங்கினாரு. அடுத்தடுத்த காலத்துல உலகத்தலைவரா உயர்ந்த யாசர் அராஃபத் தனக்குன்னு ஒரு கொள்கைய வகுக்கல. இஸ்ரேல்ட இருந்து எப்படியாச்சும் பாலஸ்தீனத்த மீட்கணும் அப்டின்றதே அவரோட ஒரே குறிக்கோளா இருந்துச்சு.

இஸ்ரேல தொடர்ச்சியா தாக்கிக்கிட்டே இருந்தா, அந்த நாட்டு மக்கள் இஸ்ரேலவிட்டு வெளிய போயிடுவாங்க. நம்மகிட்டயும் நல்ல ஆயுத பலம் இருக்குன்னு முடிவு பண்ண அராபத், இஸ்ரேலோட ராணுவ பலத்த குறைத்து எடைபோட்டதுதான் அவரோட வாழ்க்கைலயே செஞ்ச பெரிய தவறுன்னு சொல்லலாம். தினமும் ஏதாவது ஒரு விதத்துல ஜோர்டான், லெபனான் போன்ற நாடுகள்ல இருந்து இஸ்ரேல தாக்கிட்டே வந்தது.

பதாவோட தாக்குதல் - இஸ்ரேலோட பதில் தாக்குதல்கள்ல்னு நீடிச்சேட்டே போனாலும், பாலஸ்தீனர்களுக்கான நம்பிக்கை நாயகனா உருவாகிட்டு வந்தாரு அராபத். 1984 வரைக்கும் ஆயுதம் தாங்கிய போராட்டம் மூலமா மட்டும்தான் இஸ்ரேல வெல்ல முடியும்னு நெனச்ச அராபத்தோட சிந்தனை, அதுக்கு அப்புறம் மாறிச்சு. அரசியல், அமைதி பேச்சுவார்த்தை, ராஜதந்திரம் மூலமா மட்டும்தான் இஸ்ரேல்ட இருந்து பாலஸ்தீனத்த மீட்க முடியும் அப்டின்ற முடிவுக்கு வந்தாரு. அத தொடர்ந்துதான் 1993ல இஸ்ரேல் - பாலஸ்தீன் இடையேயான முதல் அமைதி ஒப்பந்தத்துல கையெழுத்து போட்டாரு அராபத்.

“இஸ்ரேல ஒரு நாடா PLO அங்கீகரிக்கும். பாலஸ்தீன பகுதிகளான காஸா, வெஸ்ட் பேங்க்ல இருந்து இஸ்ரேலோட ஆக்கிரமிப்புகள் திரும்ப பெறப்படும். பாலஸ்தீன பகுதிகள்ல சுயாட்சி முறையில ஆண்டுகொள்ளலாம்” போன்ற விஷயங்கள்தான் ஆஸ்லோ ஒப்பந்த்தோட சாராம்சமா இருந்துச்சு. இந்த ஒப்பந்தத்துல அமெரிக்க அதிபர் முன்னிலையில இஸ்ரேல் அதிபர் இசான் ராபினும் - யாசர் அராபத்தும் கையெழ்த்து போட்டு கைகுலுக்குனாங்க. இது இஸ்ரேல் - பாலஸ்தீன பிரச்சனையில அமைதிக்கான மிகப்பெரிய முன்னெடுப்பாவும் பார்க்கப்பட்டது. இதுக்கு அப்புறம் இருநாடுகளுக்கு இடையில ஒரு சின்ன அமைதி நிலவிச்சு. அத தொடர்ந்து, 1995ல 2வது ஆஸ்லோ ஒப்பந்தம் கையெழுத்தானது. அதே வருடம் நவம்பர் மாதத்துல இஸ்ரேல் பிரதமர் ராபின், தீவிர யூத தேசியவாதியால படுகொலை செய்யப்பட்டாரு.

oslo accords 1993

இதற்கிடையில பாலஸ்தீன பகுதிகள்ல நடந்த தேர்தல்ல வெற்றிபெற்ற அராபத், அதற்கு தலைவரா மாறினாரு. ஆனா, 2000வது வருஷம் நடந்த பாலஸ்தீன எழுச்சிக்கு யாசர்தான் காரணம்னு நினச்ச இஸ்ரேல் ராணுவம், PLO ஆஃபிசுக்குள்ளயே அராபத்த சிறைபிடிச்சது. அதுக்கு பிறகு, 2004வது வருஷம் உடல்நலம் பாதிக்கப்பட்ட அராஃபத், பாரிஸுக்கு ராணுவ ஹெலிகாப்டர் மூலமா அழைத்துச்செல்லப்பட்டு ராணுவ மருத்துவ முகாம்ல சேர்க்கப்படுறாரு.

யாசர் அராஃபத் மரணம்!

தொடக்கத்தில் காய்ச்சலில் பாதிக்கப்பட்ட அராஃபத், வயிற்றுப்போக்கு, வாந்தி மற்றும் குடல் அழற்சியால் கடுமையாக பதிக்கப்பட்டாரு. பாரிஸுக்கு வந்த பல நாட்டு மருத்துவ வல்லுநர்கள் சோதித்து பார்த்தும் அவரது உடலில் என்ன பிரச்சனை அப்டினு கண்டுபிடிக்கவே முடியல. தொடர் உடல்நலக்குறைவின் காரணமா 2004ம் ஆண்டு நவம்பர் 11ம் தேதி தன்னோட 75வது வயசுல உயிரிழந்தாரு அராஃபத். இதற்கிடையில அவரோட உயிரிழந்தபோது, அவரோட மனைவி சுஹா கேட்டுக்கொண்டதுக்கு இணங்க, உடற்கூறாய்வு செய்யாமலயே வெஸ்ட் பேங்க்ல இருக்க ரமல்லாவுல புதைக்கப்பட்டது அராபத் உடல்.

கொலை செய்யப்பட்டாரா யாசர் அராஃபத்?

சில ஆண்டுகள் கடந்த நிலையில, ரஷ்யாவோட முன்னாள் உளவுத்துறை அதிகாரி அலெக்சாண்டர் 2006ல விஷம் வச்சு படுகொலை செய்யப்பட்டாரு. இந்த கொலைக்கு அப்புறமா, அராஃபத்தும் விஷம் வச்சு கொலை செய்யப்பட்டிருக்கலாமோன்னு சந்தேகம் எழுந்தது. இந்த விவகாரத்துல, அல்ஜசீரா செய்தி நிறுவனம் ஆய்வு பண்ணபோது, அராபத் உடல்ல பொலோனியம் 210 அப்டின்ற நச்சுப்பொருள் இருந்தது தெரியவந்தது. அத தொடர்ந்து, தன்னோட கணவர் உடல எடுத்து ஆய்வு பண்ணனும்னு சுஹா அராபத் கேட்டுக்கொண்டதுக்கு இணங்க 2012வது வருஷம் கல்லறையில இருந்து அராபத்தோட உடல் தோண்டி இருக்கப்பட்டுச்சு. அவரோட கடைசி நிமிடத்துல பயன்படுத்தின பொருட்கள், Dress, cap எல்லாமே மனைவி சுஹாட்ட இருந்து வாங்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டுச்சு.

இந்த ஆய்வ, ரஷ்யா, பிரான்ஸ், சுவிட்ஸர்லாந்து அப்டின்னு மூன்று நாடுகள் ஆய்வுக்கு உட்படுத்தினாங்க.. ரஷ்யாவும், பிரான்ஸும் ஆய்வு முடிவுகள வெளியிடல. ஆனா, 75 மாதிரிகள சேமிச்ச சுவிட்ஸர்லாந்து விஞ்ஞானிகள் தீவிரமா ஆய்வு நடத்துனாங்க. அந்த அறிக்கைய அராபத் மனைவி சுஹா அராபத் தரப்புக்கிட்டயும் ஒப்படச்சாங்க. அராபத்தோட ரத்தம், உள்ளாடையில இருந்த சிறுநீர் படிமம், டூத் பிரஷ், தொப்பி, எலும்புகள சோதிச்சதுல, அவரோட இறப்புக்கு பொலோனியம் 210 என்ற நச்சு பொருள்தான் காரணம்னு முடிவுக்கு வந்தாங்க.

ஆய்வில்தெரியவந்தது என்ன?

இத பத்தி விஞ்ஞானிகள் என்ன சொல்றாங்க அப்டின்னா, பொலோனியம் 210 அப்டின்ற இந்த நச்சுப்பொருள், காஃபி, கண் சொட்டு மருந்து, தண்ணி அல்லது டூத் பேஸ்ட்ல கலந்து கொடுக்கப்பட்டிருக்கலாம்ற முடிவுக்கும் வந்தாங்க. ஆய்வு முடிவுகள ஆராஞ்சிப்பாத்த சுஹா ஆராபத், தன்னோட கணவர் யாசர் அராபத் பொலோனியம் 210ன்ற விஷம் வச்சு படுகொலை செய்யப்பட்டிருக்காருன்னு பகிரங்கமா அறிவிச்சாங்க.

தொடக்கத்துல இருந்தே, அராஃபத்தோட மரணத்துக்கு, இஸ்ரேல்தான் காரணம்னு பலர் குற்றம்சாட்டிலானும், இஸ்ரேலோ அத தொடர்ந்து மறுக்கத்தான் செஞ்சாங்க. ஆய்வு முடிவுகளுக்கு பிறகு பேசின சுஹா அராபத், என் கணவர எதிரி நாடுகள சேர்ந்தவங்கதான் கொலை செஞ்சிருக்காங்க.. ஆனா, தனிப்பட்ட நாட்டையோ, நபரையோ நான் குற்றம்சாட்ட விரும்பலன்னு கடந்த 2013ல பேட்டி கொடுத்தாங்க. இந்த இடத்துல பொலோனியம் பத்தி தெரிஞ்சிக்கிட்டாகனும், பொலோனியம் அப்டின்னு சொல்லக்கூடிய பொருள் உடலுக்குள்ள போனா, கிட்னி, இரைப்பை, சிறுநீரகம், எலும்பு மஜ்ஜைகள செயலிழக்க வைக்கும். இது ஒரு கைத்தேர்ந்த ஸ்லோ பாய்ஸன் அப்டின்றதுதான் உண்ம. ஆகமொத்தம் ஆய்வு முடிவுகள் மூலமா, யாசர் அராஃபத், பொலோனியத்தால உயிரழந்ததா டாக்டர்ஸ் சொல்றாங்க.

தொடக்கத்துல இருந்தே, ஓஸ்லோ ஒப்பந்தத்த இஸ்ரேலோட முக்கிய புள்ளிகளும், ராணுவமும், யூத மதவாதிகளும் எதிர்த்தாங்க. ஒப்பந்தத்துல கையெழுத்து போட்ட தங்களோட பிரதமர் ராபின, யூத தேசியவாதிகளே படுகொலை செஞ்சாங்க.. அடுத்த 10 ஆண்டுகள்ல ஒப்பந்தத்துல கையெழுத்து போட்ட பாலஸ்தீன தலைவர் பெருமகன் யாசர் அராஃபத்தும் மர்மமான முறையில உயிரிழந்தாரு. இதுல இருந்து, அவரோட உயிரிழப்புக்கு காரணமானவங்க யாரு அப்டின்றத உங்களோட யூகத்துக்கே விட்றதுதான் சரியா இருக்கும்.

வரலாற்றுச் சிறப்பு மிக்க பேச்சு!

யாசர் அராஃபத் வாழ்க்கையில, அவர் பேசுன ஒரு முக்கியமான விஷயம் ஒட்டுமொத்த உலகத்தையே திரும்பி பார்க்க வச்சது. அதாவது, 1974ல ஐ.நா பொதுச்சபையில் பேச அராபத் அழைக்கப்பட்டாரு. அப்போதான், அவருக்குள்ள இருந்த வசியம் செய்யக்கூடிய ஒரு பேச்சாளரும் வெளியவந்தாரு.

இஸ்ரேல் பாலஸ்தீன் பத்தி உருக்கமா பேச ஆரம்பிச்ச அராஃபத், ‘‘ஒரு கையில் சமாதானத்துக்கான ஆலிவ் இலையும், இன்னொரு கையில் விடுதலைப் போராளிக்கான துப்பாக்கியும் வைத்திருக்கிறேன். இதில் எதை நான் தேர்வு செய்ய வேண்டும் என்பது உலக நாடுகளில் கைகளில்தான் இருக்கிறது” என்று உணர்ச்சிப்பெருக்க பேசினார். பாலஸ்தீனத்த தனி நாடா உருவாக்கிடணும்னு கனவு கண்ட அராஃபத், கடைசி வர அது நடக்காமலயே கண்கள மூடினாரு..