உலகம்

“கொரோனா வைரஸ் தொற்று மனிதர்களை தொற்றியது எப்படி?” - கசிந்த 'WHO' ஆய்வு முடிவுகள்!

“கொரோனா வைரஸ் தொற்று மனிதர்களை தொற்றியது எப்படி?” - கசிந்த 'WHO' ஆய்வு முடிவுகள்!

EllusamyKarthik

“கொரோனா வைரஸ் தொற்று மனிதர்களை தொற்றியது எப்படி?” என்பது தொடர்பாக உலக சுகாதா மையத்தின் ஆய்வு முடிவுகள் கசிந்துள்ளன.

ஒரு வருடம் கடந்தும் இன்றளவும் உலகையே ஆட்டிப் படைத்து வருகிறது கொரோனா வைரஸ். கடந்த 2019இல் சீனாவில் தொடங்கிய இந்த வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பரவி கிடக்கிறது. மனிதர்கள் கொரோனாவை எதிர்த்து போராடி செய்து வருகின்றனர். இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்று மனிதர்களை தொற்றியது எப்படி? என்பது குறித்து உலக சுகாதார மையம் ஆய்வு செய்து தகவல் வெளியிட உள்ளது. இந்நிலையில் அந்த தகவல் கசிந்துள்ளது. 

சீனாவின் வூகான் மாகாணத்தில் தான் கொரோனா வைரஸ் தொற்று உலகிலேயே முதன்முதலில் கண்டறியப்பட்டது. அதனடிப்படையில் சீனாவுடன் சேர்ந்து உலக சுகாதார மைய ஆய்வறிஞர்கள் கொரோனா வைரஸ் எப்படி மனிதர்களுக்கு பரவியது என்பதை கண்டறிய அங்கு கள ஆய்வு மேற்கொண்டனர். அந்த ஆய்வு தகவல் வெளியாகாத நிலையில் அது குறித்த தகவல்கள் கசிந்துள்ளன. 

அதில் வவ்வால்களிடமிருந்து மனிதர்களுக்கு பரவி இருக்கலாம் என சொல்லப்பட்டுள்ளதாக தெரிகிறது. பூனைகள் கூட இந்த வைரஸ் தொற்றின் கேரியராக இருக்கலாம் என சொல்லப்பட்டுள்ளது. 

அதே நேரத்தில் ஆய்வு கூடத்தில் இருந்து இந்த வைரஸ் தொற்று பரவியதா? என்ற கேள்விக்கும் இதில் பதில் எதுவும் சொல்லப்படாமல் உள்ளது.