உலகம்

வெட்டுக்கிளிகளின் படையெடுப்பை வெளிநாடுகள் எப்படிச் சமாளித்தன?

வெட்டுக்கிளிகளின் படையெடுப்பை வெளிநாடுகள் எப்படிச் சமாளித்தன?

jagadeesh

கொரோனா பரவல் தொற்றைக் கையாள முடியாமல் உலக நாடுகள் திக்குமுக்காடிக் கொண்டிருக்க, அடுத்தப் பிரச்னையாக வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்தப் பாலைவன வெட்டுக்கிளிகளின் படையெடுப்பால் ஏற்கெனவே கென்யா, சோமாலியா நாடுகள் கடுமையான பாதிப்பைச் சந்தித்திருக்கும் நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஐ நா அமைப்பு இந்த வெட்டுக்கிளிகள் இந்தியாவை நோக்கிப் படையெடுக்கும் என எச்சரித்திருந்தது.

இந்தியாவில் இப்போது ராஜஸ்தான், ஒடிசா உள்ளிட்ட வடமாநிலங்களில் வெட்டுக்கிளிகள் வேகமாகப் பரவிப் படையெடுத்து வருகின்றனர். விவசாயிகளும் அதனை விரட்ட முடியாமல் திணறி வருகின்றனர். இந்நிலையில் ட்ரோன் வைத்து வெட்டுக்கிளிகள் படையெடுப்பைக் கண்காணிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான முயற்சியும் தொடங்கப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் "தி ஒயர்" இணைய இதழ் எந்தெந்த நாடுகள் வெட்டுக்கிளி படையெடுப்பால் பாதிக்கப்படும், அதனை எவ்வாறு முன்கூட்டியே தடுக்க முடியும் என்ற செய்தி வெளியிட்டுள்ளது.

வெட்டுக்கிளிகளால் பாதிக்கப்பட இருக்கும் நாடுகள் ?

ஆப்பிரிக்க நாடுகள்தான் வெட்டுக்கிளிகளால் அதிக பாதிப்பைச் சந்திக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா அந்தப் பட்டியலில் இதுவரை இடம்பெறவில்லை. ஆப்பிரிக்கக் கண்டத்தின் ரிபோட்டி, எரிடேரா, சோமாலியா, எத்தியோப்பியா, கென்யா இப்போது அதிகளவில் பாதிப்பு அடையும். இந்த வெட்டுக்கிளிகள் தொடர்ந்து இனப்பெருக்கம் செய்து மேலும் வளர்ந்து பயிர்களை நாசம் செய்யும். இந்த வெட்டுக்கிளிகள் அடுத்து உகாண்டா, தெற்கு உகாண்டா வரை படையெடுக்கக் கூடும். வெட்டுக்கிளிகளின் பயணத்தைக் காற்றின் திசையே முடிவு செய்யும்.

மேலும் இவை லட்சக்கணக்கில் படையெடுத்து தான்சானியா மற்றும் மத்திய ஆப்பிரிக்க நாடுகள் வரை செல்லும். இதனைப் பெருமளவு கட்டுப்படுத்த நாடுகளுக்கு இடையே சர்வதேச ஒருங்கிணைப்பு அவசியம் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

வெட்டுக்கிளிகள் படையெடுப்பைத் தடுக்க தயாராவது எப்படி ?

ஆயிரங்களிலிருந்து லட்சக்கணக்கில் வெட்டுக்கிளிகள் படையெடுக்கும். இதற்கு நாடுகள் முன்கூட்டியே தயாராக வேண்டும். வயல்வெளிகளைத் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும் சில நேரங்களில் இறக்கை இல்லாத வெட்டுக்கிளிகள் இருந்தால் அதனைத் தகுந்த பூச்சுக் கொல்லிகள் கொண்டு அழிக்க வேண்டும். எப்போதெல்லாம் முடிகிறதோ அப்போதெல்லாம் பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்த வேண்டும். அவை இயற்கையானதாக இருந்தாலும் சரி ரசாயனமாக இருந்தாலும் பயன்படுத்தலாம்.

இதுபோன்ற தாக்குதல்களைப் புதிதாக எதிர்கொள்ளும் நாடுகள் ஏற்கெனவே வெட்டுக்கிளிகள் தாக்குதலால் பாதிக்கப்பட்ட நாடுகள் எப்படி இந்தப் பிரச்னையை எதிர்கொண்டது என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். உதாரணத்துக்கு மேற்கு ஆப்பிரிக்க நாடானா மவுரிடானியாவில் வெட்டுக்கிளி தடுப்பு மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. அங்கு சுமார் 20 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவு விளை நிலங்களில் பூச்சிக்கொல்லி தெளிக்கப்படுகிறது. மேலும் விவசாயிகளுக்கும் வெட்டுக்கிளிகள் தடுப்பு நடவடிக்கைகளைச் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்று கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.