உலகம்

கல்லூரிக்குப் போகவில்லை - மில்லினியர் ஆன அமெரிக்க இளைஞர்கள்

கல்லூரிக்குப் போகவில்லை - மில்லினியர் ஆன அமெரிக்க இளைஞர்கள்

webteam

ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்திலிருந்து படிப்பை முடிக்காமல் வெளியேறிய மாணவர்கள் இருவர் மில்லியன் டாலர் மதிப்பிலான ஒரு நிறுவனத்தை உருவாக்கியுள்ளனர்.

ஹென்ரீக் டிபுகிராஸ்(23) தனது 14ஆவது வயதில் ஒரு ஆன்லைன் வீடியோ கேம்மை உருவாக்கியுள்ளார். இந்த கேம்மில் சில காப்புரிமை பிரச்னைகள் ஏற்பட்டதால் அந்த கேம்மை கைவிட்டார். அதன்பிறகு இவரும் பெட்ரோ பிரான்சஸி(22) என்பவரும் இணைந்து‘பாகர் டாட் மீ’ என்ற பணப் பரிவர்த்தனைக்கான நிறுவனத்தை தொடங்கினர். இந்த நிறுவனம் 150 ஊழியர்கள் அளவிற்கு வளர்ந்தது. எனினும் இவர்கள் இருவரும் கடந்த 2016ஆம் ஆண்டு இந்நிறுவனத்தை விற்றனர்.

இதனையடுத்து இவர்கள் இருவரும் ஸ்டான்போர்ட் பல்கலைகக்கழகத்தில் பட்டப்படிப்பை தொடங்கினர். இவர்கள் இருவரும் தங்களின் முதலாம் ஆண்டு படிப்பு முடிவதற்குள் கல்லூரி படிப்பை விட்டனர். இதனைத் தொடர்ந்து இவர்கள் ‘Brex’ என்ற நிறுவனத்தை ஆரம்பித்தனர். இந்த நிறுவனம் பொருளாதார தொழில்நுட்பம் துறையில் மெல்ல கால் பதிக்க தொடங்கியது. 

கடந்த வருடம் இந்த நிறுவனம் தனது முதல் தயாரிப்பை வெளியிட்டது.  இந்தப் புதிய தயாரிப்பு சந்தைகளில் அதிக வரவேற்பை பெற்றது. இதனையடுத்து இந்த நிறுவனத்தின் மதிப்பு 430 மில்லியன் டாலர்களாக உயர்ந்தது. அத்துடன் அமெரிக்காவில் வளர்ந்து வரும் நிறுவனங்களில் Brex நிறுவனமும் ஒன்றாக உள்ளது. 

மேலும் தற்போது இந்த நிறுவனம் கிரெடிட் கார்ட் மற்றும் ஆன்லைன் வர்த்தகம் ஆகியவற்றில் அறிமுகமாகியுள்ளது. எனவே இந்த நிறுவனத்தின் மதிப்பு அதிகரிக்க வாய்ப்பு அதிகமாகியுள்ளது. பட்டப்படிப்பை முடித்து வேலையின்றி தவிக்கும் மாணவர்களிடையே பட்டப்படிப்பை முடிக்காமல் மில்லினியர்களாக வலம் வரும் இவர்கள் இருவரும் பெரிய முன்னுதாரணமாக திகழ்வது குறிப்பிடத்தக்கது.