உலகம்

'காவல்துறையினரை எளிதில் நுழைய விடமாட்டோம்' ஹாங்காங்கில் மாணவர்கள் போராட்டம்

'காவல்துறையினரை எளிதில் நுழைய விடமாட்டோம்' ஹாங்காங்கில் மாணவர்கள் போராட்டம்

jagadeesh

ஹாங்காங் பாலிடெக்னிக் பல்கலைக்கழக வளாகத்திற்குள் காவல் துறையினரை எளிதில் நுழைய விடமாட்டோம் என மாணவர்களும், மற்ற போராட்டக்காரர்களும் தெரிவித்துள்ளனர்.

ஹாங்காங்கில் அ‌ரசுக்கு எதிராக தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், பல்வேறு கல்வி நிறுவனங்களை சேர்ந்த மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கல்லூரி வளாகத்திற்கு உள்ளேயே உணவு சமைத்து, பெட்ரோல் குண்டு உள்ளிட்ட ஆயுதங்கள் தயாரித்து தங்களின் கல்விக்கூடத்தை பாதுகாப்புமிக்க பகுதியாக மா‌ற்றியுள்ளதாக மாணவர்கள் தெரிவிக்கின்றனர். 

குறிப்பாக, ஹாங்காங் பாலிடெக்னிக் பல்கலைக்கழக வளாகத்திற்குள் முகாமிட்டுள்ள மாணவர்கள், நீச்சல் குளத்தை பெட்ரோல் குண்டு பரிசோதிக்கும் இடமாக மாற்றியுள்ளனர். பல்கலைக்கழக வளாகத்தை சுற்றி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், காவல்துறையினர் எளிதில் உள்ளே நுழைய முடியாது எனவும் போராட்டக்காரர்கள் தெரிவிக்கின்ற‌னர். இதனிடையே சீன மக்கள் விடுதலை ராணுவப்படை வீரர்கள் ஹாங்காங் வீதிகளை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். சாலைகளில் தடுப்பு அமைத்து பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், அ‌வற்றை ராணுவ வீரர்கள் அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.