உலகம்

அமெரிக்கா செல்ல இலவச டிக்கெட்: ஹோண்டா நிறுவனம்

அமெரிக்கா செல்ல இலவச டிக்கெட்: ஹோண்டா நிறுவனம்

webteam

பிரபல கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஹோண்டா நிறுவனம், தற்போது ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கோவாவில் நடைபெற்று வரும் "கிரேட் ஹோண்டா ஃபெஸ்ட்" என்ற ஆஃபர் மூலமாக ஹோண்டா ஜாஸ் மற்றும் அமேஸ் போன்ற கார்களை சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற இந்த கார்களின் மோகத்தை அதிகரிக்கும் வகையில், இந்த மாடல் கார்களை வாங்கும் போது அமெரிக்கா செல்ல இலவச டிக்கெட்  பரிசாக வழங்கப்படும் என ஹோண்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. 

இந்நிலையில் கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி முதல் அக்டோபர் 31 ஆம் தேதி வரை "கிரேட் ஹோண்டா ஃபெஸ்ட்" ஆஃபர் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர் பண்டிகைளையொட்டி இந்த சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது.