உலகம்

ஹாலிவுட் நடிகைகள் தொடங்கிய பாலியல் தொல்லைக்கு எதிரான அமைப்பு

ஹாலிவுட் நடிகைகள் தொடங்கிய பாலியல் தொல்லைக்கு எதிரான அமைப்பு

webteam

பாலியல் தொல்லைகளுக்கு எதிராக ஹாலிவுட் நடிகைகள் இணைந்து அமைப்பு ஒன்றை தொடங்கியுள்ளனர்.

ஹாலிவுட் மற்றும் பிற துறைகளில் உள்ள பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் துன்புறுத்தலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஹாலிவுட் நடிகைகள், எழுத்தாளர்கள், இயக்குனர்கள் இணைந்து அமைப்பு ஒன்றை தொடங்கியுள்ளனர். நேரம் முடிந்துவிட்டது என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டம், பொழுதுபோக்குத் துறையிலும், பிற துறைகளிலும் உள்ள பெண்களுக்கு பயனளிக்கும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஹாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீன் மீதான பாலியல் குற்றச்சாட்டைத் தொடர்ந்து, இந்த புதிய திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்துக்கு ஹாலிவுட்டின் பிரபல நடிகைகளான நடாலி போர்ட்மேன், ரீஸ் வெதர்ஸ்பூன், எம்மா ஸ்டோன் உள்ளிட்ட பலர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த திட்டத்திற்காக ரூ.82 கோடி நிதி திரட்டப்பட்டுள்ளது. இந்த அமைப்பில் இயக்குனர் ஸ்டீபென் ஸ்பீல்பெர்க், நடிகர் ஜேஜே ஆப்ராம்ஸ் உள்ளிட்டோரும் இடம்பெற்றுள்ளனர்.