உலகம்

இறுதி கட்டத்தில் சீனாவின் கடல் சுரங்கம்

இறுதி கட்டத்தில் சீனாவின் கடல் சுரங்கம்

webteam

சீனாவின் தெற்குப் பகுதியில் உள்ள இரு மாகாணங்களை இணைக்கும் விதமாக நடைபெற்று வரும் கடல் பாலம் அமைக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.

சுமார் 50 கிலோ மீட்டர்‌ தூரத்தில் தரை மற்றும் கடலுக்கு அடியில் சுரங்கப் பாலம் என இரு விதமாக பாலம் அமைக்கும்‌ பணிகள் நடைபெற்று வருகின்‌‌றன. கடலுக்கு அடியில் 28 மீட்டர் ஆழத்தில் சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட்டு வருகிறது.‌ ரிக்டர் அளவுகோலில் 8 புள்ளிகள் அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டாலும் அதனைத் தாங்கும் வகையில் இந்தப் பாலம் நிர்மாணிக்கப்பட்டு வருகிறது.