உலகம்

கொட்டி தீர்க்கும் மழையால் மேற்கு ஜெர்மனியில் வரலாறு காணாத வெள்ளம்

கொட்டி தீர்க்கும் மழையால் மேற்கு ஜெர்மனியில் வரலாறு காணாத வெள்ளம்

Sinekadhara

மேற்கு ஜெர்மனியில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்துவருகிறது. மழை கொட்டி தீர்ப்ப்தால் நதிகள் அனைத்தும் நிரம்பி பல இடங்கள் இப்படித்தான் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன.

குறிப்பாக ரைன்லேண்ட் - பலட்டினேட் மாநிலம் பெரும்பாதிப்பை சந்தித்துள்ளது. இதனால் ஜெர்மனி மட்டுமல்ல அண்டை நாடுகளான பெல்ஜியம், நெதர்லாந்து ஆகிய நாடுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. திடீர் வெள்ளப்பெருக்கால் வீடுகள், பாலங்கள் என அனைத்தும் நீரில் அடித்து செல்லப்பட்டன. 700 பேர் வசித்து வந்த கிராமமே அழிந்து போனதாக தெரிய வந்துள்ளது. மேற்கு ஜெர்மனியில் ஆயிரத்து 500 பேரை காணவில்லை எனக் கூறுகின்றனர். செல்போன் இணைப்புகள் துண்டிக்கப்பட்டிருப்பதால் பலரை தொடர்பு கொள்ள முடியவில்லை.

தற்போதைக்கு ஹெலிகாப்டர் மூலம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப்பணி நடந்து வருகிறது. வீட்டின் மேற்கூரைகளில் தஞ்சமடைந்த ஏராளமானோர் மீட்கப்பட்டுள்ளனர். பெல்ஜியம் நாட்டு எல்லையில் உள்ள அணைகள் நிரம்பி இருப்பதால் அவை எப்போது வேண்டுமானாலும் உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே பிரான்ஸ், இத்தாலி, ஆஸ்திரியா ஆகிய நாடுகள் மீட்பு குழுக்களை அனுப்பி உதவியுள்ளன. பருவநிலை மாற்ற பாதிப்புகளின் விளைவுதான் இந்த வரலாறு காணாத மழை என சூழலியர் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.