உலகம்

பூமிக்கடியில் புதையல்?”.. ஆய்வில் வரலாற்று ஆசிரியரிடம் கிடைத்த 13ம் நூற்றாண்டு ஆபரணங்கள்!

பூமிக்கடியில் புதையல்?”.. ஆய்வில் வரலாற்று ஆசிரியரிடம் கிடைத்த 13ம் நூற்றாண்டு ஆபரணங்கள்!

webteam

1250 ஆண்டுகளுக்கு முன்னர், பூமிக்கடியில் புதைத்து வைத்திருந்த புதையல் ஒன்றை நெதர்லாந்தைச் சேர்ந்த வரலாற்று ஆசிரியர் ஒருவர் கண்டுபிடித்துள்ளார்.

நெதர்லாந்தில் வரலாற்று ஆசிரியர் லோரென்சோ ரூய்ட்டர் என்பவர் 1000 ஆண்டுகள் பழமைவாய்ந்த தங்கப்புதயல் ஒன்றை கண்டுப்பிடித்துள்ளார். இவர் கண்டுபிடித்த களையத்தில் நான்கு தங்கதினால் ஆன காது பதக்கங்கள், இரண்டு தங்க துண்டுகள், தங்கத்திலான இலைகள் மற்றும் 39 வெள்ளி நாணயங்கள் இருந்துள்ளது.

இதனை ஆய்வு செய்த டச்சு தொல்பொருள் ஆய்வாளர்கள், “இத்தகைய ஆபரணங்கள் 13 ஆம் நூற்றாண்டுக்கும் முந்தியதாக இருக்கக் கூடும். 13 ஆம் நூற்றாண்டின் இடைப்பட்ட காலத்தில் டச்சு பகுதிகளான வெஸ்ட் ஃப்ரைஸ்லேண்ட் மற்றும் ஹாலந்து இடையே ஒரு போர் நடந்து கொண்டிருந்தது. அந்த  சமயம், அங்கு வாழ்ந்து வந்த யாரோ ஒருவர் அவரது சொத்துக்களை பாதுகாக்கும் பொருட்டு, பின்நாளில் உபயோகப்படுத்திக்கொள்ளலாம் என்று எண்ணி அதை மண்ணில் புதைத்து வைத்திருக்கக்கூடும். ஆனால், அதை திருப்பி எடுப்பதற்கான வாய்ப்பு அவருக்கு கிடைத்திருக்காது. அதனால்தான் அந்த பொருட்கள் அப்படியே இத்தனை காலம் இருந்து வந்துள்ளது” என்றனர்.

முன்னதாக, இப்புதையல் குறித்து, தொல்பொருள் ஆய்வாளரான ராய்ட்டர்ஸ், லோரென்சோ ரூய்ட்டரிடம் , ”இது உங்களுக்கு எப்படி கிடைத்தது?” என்று கேட்டதற்கு, அவர், “எனக்கு சிறுவயதிலிருந்தே வரலாற்றின் மீது ஆர்வம் அதிகம். முன்னோர்கள், பண்டைய காலங்களில் எப்படி வாழ்ந்தார்கள் என்பதை பற்றி ஆராய்ந்து வருகிறேன். அதன் படி பூமியில் புதையுண்டு கிடக்கும், பொருட்களை எனது மெட்டல் டிடெக்டரைக் கொண்டு ஆராய்ந்ததில் இப்புதையல் ஹூக்வூடிவ் நகரில் கிடைத்தது” என்றி கூறினார்.

டச்சு தேசிய பழங்கால அருங்காட்சியகம் (ரிஜ்க்ஸ்மியூசியம் வான் ஓட்ஹெடென்) லோரென்சோ ரூய்ட்டரிக்கு சொந்தமான இப்புதையலானது பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.