உலகம்

’வான்னாக்ரை’ ஹீரோ திடீர் கைது!

’வான்னாக்ரை’ ஹீரோ திடீர் கைது!

webteam

உலகளவில் நிகழ்ந்த இணையத் தாக்குதலான ’வான்னாக்ரை’யை தடுக்க உதவிய பிரிட்டன் சாப்ட்வேர் நிபுணர் மார்கஸ் ஹட்சின்ஸ் கைது செய்யப்பட்டுள்ளார். வங்கி கணக்கு பாஸ்வேர்டுகளை திருடும் மென்பொருளை தயாரித்து பரப்பியதாக இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

உலகம் முழுவதும், கடந்த மே மாதம் 'வான்னாக்ரை' எனப்படும் நாசகார வைரஸ் முன்னணி நிறுவனங்களின் கம்ப்யூட்டர்களை தாக்கியது. இதன் காரணமாக, ஏராளமான கம்ப்யூட்டர்கள் செயலிழந்தன. பல நிறுவனங்கள், கோடிக்கணக்கான ரூபாய் நஷ்டத்தை சந்திக்க நேரிட்டது. பிரிட்டன் சாப்ட்வேர் நிபுணர், மார்கஸ் ஹட்சின்ஸ் அந்த வைரசை கட்டுப்படுத்த உதவினார். இதனால், உலகளவில் அவருக்கு பாராட்டுக் கிடைத்தன. 

இந்நிலையில் கம்ப்யூட்டர்களில் வைரஸை பரவவிட்டு வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கு பாஸ்வேர்ட் உள்ளிட்ட தகவல்களை மார்கஸ் திருடி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரசுக்கு, 'க்ரோனோஸ் பாங்கிங் ட்ரோஜன்' எனப் பெயரிடப் பட்டுள்ளது. இந்த சாப்ட்வேரை தயாரித்து பரப்பியதாக, மார்கஸை அமெரிக்க போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். 
அமெரிக்காவின் லாஸ்வேகாஸில் இருந்து லண்டன் செல்ல இருந்த அவரை விமான நிலையத்தில் போலீசார் கைது செய்துள்ளனர்.