உலகம்

”தூய நரையிலும் காதல் மலருதே” - மளிகை கடையில் மணமுடித்த முதிய ஜோடி.. நெகிழ்ச்சி பின்னணி!

”தூய நரையிலும் காதல் மலருதே” - மளிகை கடையில் மணமுடித்த முதிய ஜோடி.. நெகிழ்ச்சி பின்னணி!

JananiGovindhan

தீம் (theme) அடிப்படையிலான திருமண நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருவதால் மண்டபங்களில் திருமணங்கள் நடப்பது சற்று குறையவே தொடங்கியிருக்கிறது. அதன்படி பலரும் destination wedding என்ற முறையிலும், எளிமையாக அவரவர்களின் வசதிக்கு ஏற்ப வீடுகள், வழிபாட்டு தலங்களில் திருமணத்தை முடித்துவிட்டு வரவேற்பு நிகழ்ச்சியை மட்டும் அதற்கான ஹாலில் நடத்தும் பழக்கத்துக்கு பலரும் மாறி வருகிறார்கள்.

இப்படியாக நிலைமை இருக்க, அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு முதிய ஜோடி வித்தியாசமாக தாங்கள் முதல் முதலில் சந்தித்த இடத்திலேயே தங்களது திருமணத்தை நடத்தியிருக்கும் செய்தி கடல் கடந்து பெருமளவில் பேசப்பட்டு வருகிறது. இதில் என்ன புதுமை இருக்கிறது என கேள்வி எழலாம். ஆனால் அந்த முதிய ஜோடி ஏதோ பார்க், பீச்சில் சந்தித்து பேசவில்லை. அவர்களின் காதல் பாதை தொடங்கியது ஒரு மளிகை கடையில்.

அமெரிக்காவின் தென்மேற்கு பகுதியில் உள்ள அரிஸோனை சேர்ந்தவர்கள் 72 வயது பிரெண்டா வில்லியம்ஸ் மற்றும் 78 வயதுடைய டென்னிஸ் டெல்கடோ. இவர்கள் இருவரும்தான் அரிஸோனாவின் Casa Grande-ல் உள்ள grocery store-ல் திருமணம் செய்திருக்கிறார்கள்.

டென்னிஸும், பிரெண்டாவும் கொரோனா ஊரடங்கின் போது கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்தான் அந்த மளிகை கடையில் சந்தித்திருக்கிறார்கள். அப்போது பிரெண்டா தீவிரமாக mayonnaise தேடிக் கொண்டிருந்தபோது, அவரை பின் தொடர்ந்து சென்று பேச முற்பட்டிருக்கிறார் டென்னிஸ்.

அப்போது, “எல்லோரும் மாஸ்க் அணிந்திருந்ததால், ‘மாஸ்க் போட்டுக்கொள்வதால் நல்ல விஷயம் என்னென்னா, ஒருவரை கடந்து செல்லும் போது அவர் பற்றி ஏதும் பேசினால் கூட எதுவும் தெரியாது. அவர்களுக்கும் அது கேட்காது’ என பிரெண்டாவிடம் தான் கூறியதை கேட்டு அவர் அங்கேயே கலகலவென சிரித்தார்.” என டென்னிஸ் fox 13 செய்தி தளத்திடம் கூறியிருக்கிறார்.

தொடர்ந்து பேசியுள்ள அவர், “அன்று அரை மணிநேரம் பேசிய பிறகு ஃபோன் நம்பர் பரிமாற்றத்துடன் எங்களுடைய உறவு தொடங்கி மீட்டிங், டேட்டிங் வரை சென்றது” என்றிருக்கிறார் டென்னிஸ்.

அவரைத் தொடர்ந்து பேசிய பிரெண்டா, “என் கணவர் prostate கேன்சரால் இறந்த பிறகு வாழ்வதற்கான நோக்கத்தையே இழந்திருந்தேன். என் திருமண வாழ்க்கையின் 30 ஆண்டுகளில் 10 ஆண்டுகளை என் கணவரை பராமரிக்கவே செலவிட்டேன்” எனக் கூறியிருந்தார். அதேபோல டென்னிஸும் தனது 45 ஆண்டுகால மனைவியின் இழப்பு குறித்தும் பேசியிருக்கிறார்.

இந்த நிலையில்தான், டென்னிஸும், பிரெண்டாவும் சந்தித்து பழகி பின்னர் ஒருவருக்கொருவர் உறுதுணையாக இருந்திருக்கிறார்கள். சரியாக 9 மாதங்களுக்கு பிறகு இருவரும் இந்த நவம்பர் மாதம் மீண்டும் அதே மளிகை கடைக்கு சென்று பொருட்களை வாங்கும் சமயத்தில் பிரெண்டா முன்பு மண்டியிட்டு மோதிரத்தை நீட்டு டென்னிஸ் தன்னுடைய காதலை வெளிப்படுத்த அவரும் அதற்கு தலையசைக்க இருவரும் வாஞ்சயுடன் முத்தமழையை பொழிந்திருக்கிறார்கள்.

இந்த நிகழ்வை கண்ட அந்த மளிகை கடை ஊழியர்கள் உட்பட பலரும் நெகிழ்ந்துப்போய் டென்னிஸ், பிரெண்டா ஜோடிக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்திருக்கிறார்கள்.