ஸ்பெயினில் கனமழை pt web
உலகம்

கனமழை, பெருவெள்ளத்தில் தத்தளிக்கும் ஸ்பெயின்.. 70க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

ஸ்பெயினில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் 72 பேர் உயிரிழந்துள்ளனர்.

PT WEB

ஸ்பெயினின் தென்கிழக்கு பகுதிகள் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ளன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஏராளமானோரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டு வருகின்றன. வாலன்சியா, அன்டலுசியா உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்புகள் தண்ணீரில் மூழ்கின.

வாலன்சியாவில் ஒரு வருடத்திற்கு பெய்யும் மழை 8 மணி நேரத்திற்குள் பெய்துள்ளதாக அந்நாட்டு வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். வெள்ளத்தில் பல்வேறு சாலைகள் அடித்து செல்லப்பட்டதில் போக்குவரத்து முடங்கியுள்ளது. மழைநீர் அதிகமாக தேங்கியுள்ள இடங்களில், மக்கள் கார்களின் மேலே நடந்து சென்ற சம்பவங்களும் நடந்தது. பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தது.

வீடுகளை விட்டு வெளியேற முடியாதவர்களை மீட்பு படையினர் மீட்டு வருகின்றனர். கிட்டத்தட்ட 1000க்கும் மேற்பட்ட மீட்புப் படையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். வெள்ளம் சூழ்ந்த பகுதியில் சிக்கிய குழந்தை ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்ட காட்சிகளும் வெளியாகியுள்ளன. இதனிடையே 300 பயணிகளுடன் சென்ற அதிவிரைவு ரயில் தடம் புரண்டதால், ரயில் சேவையும் நிறுத்தப்பட்டது.