நியூசிலாந்தில் நூறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெய்த கனமழையால், அபாய கட்டத்தை தாண்டி முக்கிய ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது.
நியூசிலாந்தின் கான்டர்பி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்ததால், நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளன.
இடைவிடாது பெய்யும் மழை காரணமாக பள்ளிகள், அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளன. மேம்பாலத்தை தொட்டபடி வெள்ளம் ஓடுவதால், முக்கிய நெடுஞ்சாலைகளும் மூடப்பட்டுள்ளன. வெள்ளத்தில் தத்தளிப்பவர்களை மீட்க ஹெலிகாப்டர் மூலம் மீட்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.