பயங்கரவாத இயக்கங்களின் பட்டியலில் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் இயக்கத்தை தொடர்ந்து வைத்திருக்க ஐரோப்பிய ஒன்றிய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஹமாஸ் இயக்கத்தின் சொத்துகளை முடக்குவதற்கும், அதன் தலைவர்களுக்கு பயணத் தடை விதிப்பதற்கும் போதிய ஆதாரங்கள் இல்லை என கடந்த 2014-ஆம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றிய கீழ் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை தற்போது நிராகரித்திருக்கும் உச்சநீதிமன்றம், மீண்டும் விசாரணை நடத்துமாறு கீழ்நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டிருக்கிறது. இதே வழக்கில் விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகள் பட்டியிலில் இருந்து நீக்கியும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாலஸ்தீனத்தின் காஸா பிராந்தியத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் இயக்கம், 1980-களின் இறுதியில் தொடங்கிய முதலாவது பாலஸ்தீன எழுச்சியின்போது ஷேக் யாசின் என்பவரால் உருவாக்கப்பட்டது. தற்போது இதன் தலைவராக கலேத் மேஷல் இருந்து வருகிறார்.