இஸ்ரேல் படைகள் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் தலைவர் ஹனியே கொல்லப்பட்டுள்ளார்.
ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள இஸ்மாயில் ஹனியே வீட்டில் நடத்தப்பட்ட தாக்குதலில், அவர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. ஹனியே உயிரிழந்துள்ளதை, ஈரான் நாட்டின் ராணுவ புரட்சிகரப் படைப்பிரிவு அதிகாரிகள் உறுதிப்படுத்தி உள்ளனர்.
வான்வழித் தாக்குதல் மூலம் தங்கள் தலைவர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள ஹமாஸ் அமைப்பு, இந்த தாக்குதலை நடத்திய இஸ்ரேல் படைகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபர் முதல், இஸ்ரேல் - ஹமாஸ் படைகளுக்கு இடையிலான சண்டை நடைபெற்று வரும் நிலையில், இஸ்ரேல் தரப்பில் ஆயிரத்து 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், 250க்கும் மேற்பட்டோர் பிணைக் கைதிகளாக ஹமாஸ் அமைப்பினரால் பிடித்து வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், ஹமாஸ் அமைப்பின் தலைவர் கொல்லப்பட்டுள்ளது, பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.