உலகம்

ஹபீஸ் சயீத் ஆதரவு கட்சி: பாக். உள்துறை எதிர்ப்பு

ஹபீஸ் சயீத் ஆதரவு கட்சி: பாக். உள்துறை எதிர்ப்பு

webteam

மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீதின் ஆதரவு பெற்ற கட்சியை அங்கீகரிக்கக் கூடாது என பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.

கடந்த 2008ஆம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீத் தலைமையிலான ஜமாத்-உத்-தவா என்ற தீவிரவாத அமைப்பு, மில்லி முஸ்லிம் லீக் என்ற கட்சியை தொடங்கியது. இதனை அரசியல் கட்சியாக அங்கீகரிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கும் விண்ணப்பித்தது. இதற்கிடையே அக்கட்சியின் அங்கீகாரம் பெற்ற வேட்பாளராக அல்லாமல், கட்சியின் ஆதரவு பெற்ற வேட்பாளராக ஷேக் யாகூப் தேர்ந்தெடுக்கப்பட்டார். நவாஸ் ஷெரிப் மனைவியை எதிர்த்து போட்டியிட்ட அவர், தோல்வி அடைந்தார். இருப்பினும் அக்கட்சி 3ஆம் இடத்தை பிடித்தது.

இந்நிலையில் மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீதின் ஆதரவு பெற்ற கட்சியை அங்கீகரிக்கக் கூடாது என பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம் அந்நாட்டு தேர்தல் ஆணையத்தை கேட்டுக்கொண்டுள்ளது. அக்கட்சியை அங்கீகரித்தால் அரசியலில் பயங்கரவாதம், வன்முறை அதிகரிக்கும் எனவும் பாகிஸ்தான் அரசு சுட்டிக்காட்டியுள்ளது. பாகிஸ்தானில் அடுத்தாண்டு நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் போட்டியிட அந்த கட்சி திட்டமிட்டுள்ள நிலையில், அரசு அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.