உலகம்

ஹெச்1பி விசா நடைமுறை ஒழிக்கப்பட வேண்டும் - நாடாளுமன்ற உறுப்பினர்கள்

ஹெச்1பி விசா நடைமுறை ஒழிக்கப்பட வேண்டும் - நாடாளுமன்ற உறுப்பினர்கள்

Rasus

லாட்டரி முறையில் ஹெச்1பி விசா வழங்கும் நடைமுறை ஒழிக்கப்பட வேண்டும் என அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

லாட்டரி முறையில் ஹெச்1பி விசா வழங்குவது இந்தியர்களால் பெரிதும் விரும்பப்படும் நடைமுறை. தற்போதுள்ள நடைமுறையின்படி, வருடத்திற்கு 85,000 ஹெச்1பி விசாக்கள் லாட்டரி முறையில் வழங்கப்படுவதாகவும், இதன் மூலம் வேலைக்கு சேர்க்கப்படும் வெளிநாட்டு பணியாளர்கள், அமெரிக்க குடிமக்களை விட குறைவான சம்பளத்திற்கு வேலை பெறுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

“கூடுதல் தகுதிவாய்ந்த வெளிநாட்டு பணியாளர்கள் அமெரிக்காவில் உள்ள நிறுவனங்களில் வேலைக்கு அமர்த்தப்படுவதற்காக உருவாக்கப்பட்டதுதான் ஹெச்1பி விசா ஏற்படுத்தப்பட்டதன் உண்மையான நோக்கம். ஆனால் தற்போது அது நடைமுறையில் இல்லை என்பதால், உடனடியாக லாட்டரி முறையில் ஹெச்1பி விசா வழங்கும் முறை ஒழிக்கப்பட்டு, தகுதியானவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் வகையில் மாற்றம் கொண்டுவர வேண்டும்” என்று அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.