உலகம்

குர்திஸ்தான் தனிநாடு வாக்கெடுப்பு: ஈராக் எதிர்ப்பு, இஸ்ரேல் ஆதரவு

குர்திஸ்தான் தனிநாடு வாக்கெடுப்பு: ஈராக் எதிர்ப்பு, இஸ்ரேல் ஆதரவு

webteam

ஈராக்கின் எதிர்ப்புடனும், இஸ்ரேலின் ஆதரவுடனும் குர்திஸ்தான் தனிநாடு பொதுவாக்கெடுப்பு இன்று நடைபெறுகிறது.

ஈராக் நாட்டின் வடக்கு பகுதியில் குர்து இன மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் குர்கிஸ்தான் எனும் தனிநாடு கோரி, கடந்த 50 வருடங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக, குர்து தொழிலாளர் கட்சியினர் ஆயுதமேந்திய போராட்டமும் நடத்தி வருகின்றனர். 

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள ஈராக் பிரதமர் ஹைதர் அல்-பாக்தாதி, ஈராக் பிரிவதை ஒருபோதும் ஏற்க முடியாது என்று கூறியுள்ளார். குர்து இன மக்கள் தனிநாடு கோரிக்கையை கைவிட வேண்டும் என்றும், இல்லையென்றால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். அத்துடன் இனிமேல் ராணுவ நடவடிக்கையும் எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் குர்கிஸ்தான் தனிநாடு கோரிக்கை மீதான பொதுவாக்கெடுப்பு  இஸ்ரேல் ஆதரவுடன் இன்று நடைபெற்று வருகிறது.