உலகம்

குழந்தைகள் மீது துப்பாக்கிச்சூடு:'ஏதாவது செய்யுங்கள்' என ஜோ பைடனை நோக்கி கூச்சலிட்ட மக்கள்

குழந்தைகள் மீது துப்பாக்கிச்சூடு:'ஏதாவது செய்யுங்கள்' என ஜோ பைடனை நோக்கி கூச்சலிட்ட மக்கள்

ச. முத்துகிருஷ்ணன்

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூட்டில் இறந்த பள்ளிக் குழந்தைகளுக்கு அதிபர் ஜோ பைடன் அஞ்சலி செலுத்தியபோது, துப்பாக்கிச்சூடு நிகழ்வுகளை தடுக்க ஏதாவது செய்யுங்கள் என பொதுமக்கள் கூச்சலிட்டனர்.

கடந்த 25-ஆம் தேதி டெக்சாஸ் மாகாணம் யுவால்டி நகரில் உள்ள ராப் ஆரம்பப் பள்ளிக்குள் துப்பாக்கியுடன் நுழைந்த 18 வயது இளைஞர் பள்ளி குழந்தைகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினார். இந்த சம்பவத்தில் 19 குழந்தைகள், 2 ஆசிரியர்கள் உள்பட 21 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சம்பந்தப்பட்ட பள்ளிக்கு சென்று துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். அதைத்தொடர்ந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நேரில் ஆறுதல் தெரிவித்து, அவர்களுடன் அங்குள்ள தேவாலயத்தில் பிராத்தனையும் செய்தார்.

தேவாலயத்தில் இருந்து வெளியே வரும்போது, அங்கு கூடியிருந்த பொதுமக்கள், துப்பாக்கிச்சூடு நிகழ்வுகளை தடுக்க ஏதாவது நடவடிக்கை எடுங்கள் என ஜோ பைடனை நோக்கி கூச்சலிட்டனர். அதற்கு நிச்சயமாக , நிச்சயமாக என பதிலளித்தபடியே அதிபர் பைடன் அங்கிருந்து கிளம்பிச்சென்றார்.