உலகம்

மேற்கு ஆப்ரிக்க நாடான கினியாவில் ராணுவப்புரட்சி மூலம் ஆட்சிக்கவிழ்ப்பு

மேற்கு ஆப்ரிக்க நாடான கினியாவில் ராணுவப்புரட்சி மூலம் ஆட்சிக்கவிழ்ப்பு

Veeramani

மேற்கு ஆப்ரிக்க நாடான கினியாவில் ராணுவப்புரட்சி நடந்து ஆட்சி கவிழ்க்கப்பட்டுள்ளது.

கினியா அதிபர் மாளிகையை சுற்றி வளைத்துள்ள ராணுவம், அரசமைப்பு சாசனம் செல்லாது என அறிவித்துள்ளது. அதிபர் ஆல்ஃபா கோண்டே-வை சிறைபடுத்தியுள்ளதாக ராணுவம் தெரிவித்துள்ளது, நாட்டின் அனைத்து எல்லைகளும் மூடப்பட்டுள்ளன. இதன் பின் அரசுத் தொலைக்காட்சியில் பேசிய ராணுவ தளபதி மமடி டோம்புயா, நாட்டை காப்பாற்றுவதுதான் ஒரு ராணுவ வீரனின் கடமை என தெரிவித்தார்.

தற்போதுள்ள மாகாண ஆளுநர்கள் அனைவரும் மாற்றப்படுவார்கள் என்றும், தங்கள் ஆட்சிக்கு ஒத்துழைக்காதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ராணுவ தளபதி எச்சரித்துள்ளார். இதற்கிடையில் கினியா ராணுவப் புரட்சியை ஐநா சபை கண்டித்துள்ளதுதுப்பாக்கி முனையில் அமையும் ஆட்சியை ஏற்க முடியாது என ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியா குட்டரஸ் தெரிவித்துள்ளார்.