ஜிஎஸ்டி எனும் ஒற்றை வரியை அமல்படுத்துவதன் மூலம், வர்த்தகத்துக்கு உகந்த நாடாக இந்தியா திகழ்கிறது எனக் குறிப்பிட்ட பிரதமர் மோடி, இந்தியாவில் முதலீடு செய்ய வருமாறு அமெரிக்க பன்னாட்டு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்தார்.
அமெரிக்காவுக்கு அரசுமுறை பயணமாகச் சென்றுள்ள பிரதமர் மோடி, வாஷிங்டனில் 20 முன்னணி அமெரிக்க நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளைச் சந்தித்துப் பேசினார். அதில், விசா நடைமுறைகளை எளிதாக்குவது மற்றும் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவது, முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தினார். அப்போது, வர்த்தகத்தில் 7 ஆயிரத்துக்கும் அதிகமான சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட அவர், உலக நாடுகள் அனைத்தும் இந்தியாவை உற்றுநோக்குவதாகத் தெரிவித்தார்.
ஜிஎஸ்டி எனும் ஒற்றை வரியை அமல்படுத்துவது என்ற மிகப்பெரிய கடினமான முடிவை எடுத்து, அதை சரியாக அமல்படுத்த இந்தியாவில் முடியுமென்பது உலகுக்குத் தெரியவந்துள்ளது எனக் குறிப்பிட்ட மோடி, இது அமெரிக்க வணிக பாடத்திட்டத்தில் இடம்பெற்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை எனக் குறிப்பிட்டார்.