ஐநா பருவநிலை மாநாட்டிற்கு வந்த அமெரிக்க அதிபர் ட்ரம்பை, இளம் பெண் செயற்பாட்டாளர் கிரேட்டா தன்பர்க் முறைத்துப் பார்த்துக்கொண்டிருந்த வீடியோ வைரலாகி வருகிறது.
பருவநிலை மாற்றத்திற்கு எதிரான போராட்டத்தை முன்னேடுத்து வருபவர் சுவீடன் நாட்டை சேர்ந்தவர் கிரேட்டா தன்பெர்க் (16). “பருவநிலை மாற்றத்திற்காக பள்ளிக்கு செல்லவில்லை” என்ற போராட்டத்தின் மூலம் உலகளவில் பிரபலமான இவர், பருவநிலை பாதுகாப்புக்காக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து நடத்தி வருகிறார்.
இந்நிலையில் நேற்று ஐ.நா.வில் நடந்த பருவநிலை மாநாட்டில் பங்கேற்று பேசிய இவர் உலக நாடுகளின் தலைவர்களை கடுமையாக சாடினார். முன்னதாக மாநாட்டுக்காக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வருகை தந்தார். அங்கு ஓரமாக நின்று கொண்டிருந்த கிரெட்டா, ட்ரம்பை இறுக்கமான முகத்துடன் முறைத்து பார்த்துக்கொண்டு இருந்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.