உலகம்

எத்தியோப்பிய விமான விபத்து: 2 நிமிடத்தில் வந்த அதிர்ஷ்டம்!

எத்தியோப்பிய விமான விபத்து: 2 நிமிடத்தில் வந்த அதிர்ஷ்டம்!

webteam

இரண்டு நிமிடம் தாமதமாக வந்ததால், எத்தியோப்பிய விமான விபத்தில் இருந்து தப்பியுள்ளார், அதிர்ஷ்டக்காரர் ஒருவர்.

எத்தியோப்பியா தலைநகர் அடிஸ் அபாபா நகரில் இருந்து எத்தியோப்பிய ஏர்லைன்ஸ்க்கு சொந்தமான போயிங் 737 விமானம் 149 பயணிகள், 8 ஊழியர்களுடன் கென்யா தலைநகர் நைரோபிக்கு நேற்று புறப்பட்டது. 50 கி.மீ தொலைவில் உள்ள பிஷோப்டு பகுதியில் பறந்துகொண்டிருந்த போது, விமானம் விபத்துக்குள்ளானது. 

இந்த விபத்தில், கென்யாவைச் சேர்ந்த 32 பேர், எத்தியோப்பியாவைச் சேர்ந்த 9 பேர், கனடாவைச் சேர்ந்த 18 பேர், சீனா, இத்தாலி, அமெரிக்கா வைச் சேர்ந்த தலா 8 பேர், பிரான்ஸ், இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த 7 பேர், எகிப்து நாட்டைச் சேர்ந்த 6 பேர், நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த 5 பேர், இந்தியா, ஸ்லோவோகியா நாடுகளைச் சேர்ந்த தலா 4 பேர் என மொத்தம் 157 பேர்  உயிரிழந்தனர்.

இந்த விபத்தில் உயிரிழந்த இந்தியர்கள் யார் என்பது தெரிய வந்துள்ளது. அவர்கள், வைத்யா பனகேஷ் பாஸ்கர், வைத்யா ஹன்சின் அனகேஷ், நுகவரப்பு மனிஷா மற்றும் ஷிகா கார்க். இதில் ஷிகா கார்க், மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சக ஆலோசகர். நைரோபியில் நடக்கும் ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்டத்தின் வருடாந்திரக் கூட்டத்தில் பங்கேற்க, சென்றிருந்தார். நுகவராப்பு மனிஷா, ஆந்திரா மாநிலம் குண்டூ ரைச் சேர்ந்தவர். 

இந்நிலையில், ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் திட்டத்தின் வருடாந்திரக் கூட்டத்தில் பங்கேற்க இருந்த இன்னொருவர், 2 நிமிட தாமத த்தால் உயிர் தப்பியுள்ளார். அவர், அந்தோனிஸ் மாவ்ரோபவுலாஸ்!

சர்வதேச திடக்கழிவு அமைப்பின் தலைவர். விபத்துக்குள்ளான விமானத்தில் செல்ல இருந்த இவர், 2 நிமிடம் தாமதமாக வந்ததால், விமான நிலைய புறப்பாடு கேட் மூடப்பட்டுவிட்டது. அவரை அனுமதிக்கவில்லை என்பதால் அவர் அங்கிருந்தவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஆனால், அவர்கள் அதைக் கண்டுகொள்ளவில்லை.

(அந்தோனிஸ் மாவ்ரோபவுலாஸ்)
 
இதுபற்றி அவர் முகநூலில், ‘சரியான நேரத்துக்குள் விமான நிலைய ’கேட்’டுக்குள் செல்ல யாரும் எனக்கு உதவவில்லை. இதனால் பைத்திய மாக உணர்ந்தேன். ஆனால், அது எனக்கு அதிர்ஷ்டமாக அமைந்துவிட்டது’’ என்று கூறியுள்ளார். விமானத்தின் டிக்கெட்டையும் பதிவிட்டுள் ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ள தகவலில், ‘’பின்னர் என்னை விமான நிலைய காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். ’எதிர்ப்பு ஏதும் தெரிவிக்க வேண்டாம். ஆனால், கடவுளுக்கு நன்றி சொல்லுங்கள். நீங்க செல்ல இருந்த விமானம் விபத்துக்குள்ளாகிவிட்டது. நீங்கள் மட்டும் தான் தப்பியிருக்கிறீர்கள்’ என்று தெரிவித்தனர்.

நான் அதிர்ச்சி அடைந்தேன். பின்னர் அந்த விமானத்தில் செல்லாததற்காக என்னிடம் விசாரிக்க வேண்டும் என்று கூறினர். பின்னர் எனது பாஸ் போர்ட் உள்ளிட்டவற்றை சரிபார்த்துவிட்டு விட்டுவிட்டனர்’’ என்று தெரிவித்துள்ளார்.