உலகம்

'அனைத்து கட்சிகள் பங்கேற்கும் தேசிய அரசு' - அதிபர் கோட்டாபய ராஜபக்சவின் முயற்சி தோல்வி !

'அனைத்து கட்சிகள் பங்கேற்கும் தேசிய அரசு' - அதிபர் கோட்டாபய ராஜபக்சவின் முயற்சி தோல்வி !

Veeramani

இலங்கையில் அனைத்து கட்சிகள் பங்கேற்கும் தேசிய அரசு அமைக்கும் அதிபர் கோட்டாபய ராஜபக்சவின் முயற்சி தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருகிறது.

இலங்கையில் விலைவாசி ஏற்றம், பொருட்கள் தட்டுப்பாடு காரணமாக அரசுக்கு எதிராக மக்கள் வெகுண்டெழுந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதனால் இலங்கையில் நிலவும் அசாதாரண சூழலை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் எதிர்க்கட்சியினர் மற்றும் சுயேச்சைகளுடன் சேர்ந்து தேசிய அரசு அமைக்க அதிபர் கோட்டாபய ராஜபக்ச முயற்சி செய்து வருகிறார்.

இதன் ஒரு பகுதியாக 42 சுயேச்சை எம்பிக்கள் உள்ளிட்ட 11 கட்சிகளின் பிரதிநிதிகளுடன் அதிபர் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் அதிபரின் உறுதிமொழிகளை ஏற்க எந்த கட்சியினரும் முன்வரவில்லை என்றும், எனவே பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் பேச்சுவார்த்தை தொடரும் என சுயேச்சை எம்பி ஆன வாசுதேவ நாணயக்காரா தெரிவித்துள்ளார்.



அதேநேரம் ஆளும் கூட்டணியில் இருந்து விலகிய 42 எம்பிக்களும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவையும், முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேனவையும் சந்தித்து பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது. பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசில் 4 அமைச்சர்கள் மட்டுமே உள்ளதும் மேலும் 26 பேர் நியமிக்கப்பட வேண்டியுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இலங்கையில் பொருளாதார பிரச்னைகள் நீடிக்கும் நிலையில அரசியல் குழப்பமும் ஏற்பட்டுள்ளதால் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.