உலகம்

கடலில் தத்தளித்தவர்களை மனித சங்கிலி அமைத்து காப்பாற்றிய நல்உள்ளங்கள்

கடலில் தத்தளித்தவர்களை மனித சங்கிலி அமைத்து காப்பாற்றிய நல்உள்ளங்கள்

webteam

அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் கடலில் தத்தளித்த 9 பேரை கடற்கரையில் இருந்த சுமார் 80 பேர் மனித சங்கிலி அமைத்து காப்பற்றி கரை சேர்த்தனர். 

ஃபுளோரிடாவின் பனாமா நகர கடற்கரை சுற்றுலாப் பயணிகளின் விருப்பமான இடம். பனாமா நகரவாசிகளும் அது ஒரு அற்புதமான பொழுதுபோக்குத் தலம். இந்த நிலையில், கடலில் குளிக்கச் சென்ற ராபர்டோ உர்ஸ்ரே என்பவரது குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் அலைகளில் சிக்கி ஆழமான பகுதிக்கு இழுத்துச் செல்லப்பட்டனர். அவர்களைக் காப்பாற்றச் சென்ற 3 நீச்சல் வீரர்களும் அலைகளால் இழுத்துச் செல்லப்பட, 9 பேரும் கடலில் தத்தளிக்கத் தொடங்கினர். மேலும், அவர்களைச் சுற்றி சுறா ஒன்றும் வட்டமடிக்கத் தொடங்கியது. இதனால் உயிருக்கு ஆபத்தான நிலையில் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தவர்கள், தங்களைக் காப்பாற்றும்படி கூக்குரலிட்டனர். அவர்கள் கடலில் தத்தளிப்பதை முதலில் பார்த்த ஜெஸிகா மே சிம்மன்ஸ் என்பவர், தனது 8 மற்றும் 11 வயது மகன்களின் உதவியுடன் கடற்கரையில் இருந்த மற்றவர்களையும் உதவிக்கு அழைத்தனர். கணநேரத்தில் சிந்தித்து செயல்பட்ட ஜெஸிகா அங்கிருந்த சுமார் 80 பேரின் உதவியுடன் மனிதச் சங்கிலி அமைத்து கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தவர்களை பாதுகாப்பாக கரை சேர்த்தார்.