மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளதாக டைகர் உட்ஸ் தெரிவித்துள்ளார்.
பிரபல கோல்ஃப் விளையாட்டு வீரரான டைகர் உட்ஸ் கடந்த மாதம் அமெரிக்காவில் கார் விபத்தில் சிக்கி காயமடைந்தார். அங்குள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தனது காரில் பயணம் செய்தபோது ரோலிங் ஹில் எஸ்டேட்ஸ் பகுதியில் திடீரென விபத்தில் சிக்கினார். இதில் இவரது கார் புல்வெளி பகுதியில் உருண்டு கவிழ்ந்தது. காரில் தனியாக பயணித்த உட்ஸ் பலத்த காயம் அடைந்தார். தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார்.
அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கபட்டது. இந்நிலையில் டைகர் உட்ஸ் வீட்டிற்கு திரும்பியுள்ளதாக ட்விட்டரில் ட்வீட் செய்துள்ளார்.
“நான் மகிழ்வுடன் தெரிவித்து கொள்ள விரும்புவது என்னவென்றால் நான் வீட்டிற்கு திரும்பியுள்ளேன். இங்கிருந்தபடியே காயத்திலிருந்து குணமடைய உள்ளேன். கடந்த சில வாரங்களாக நீங்கள் கொடுத்த ஊக்கத்திற்கும், ஆதரவிற்கும் நான் கடமைப்பட்டுள்ளேன்.
வீட்டில் இருந்தபடி குணமடையவும், வலுவடைவதற்காகவும் உழைக்க உள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இந்த ட்வீட்டில் தனக்கு சிகிச்சை கொடுத்த மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் மற்றும் மருத்துவமனை நிர்வாகத்திற்கும் டைகர் உட்ஸ் நன்றி தெரிவித்துள்ளார்.