உலகம்

மாவீரன் நெப்போலியனின் கீரீடத்தில் இருந்த தங்க இலை ரூ.4 கோடிக்கு ஏலம்

மாவீரன் நெப்போலியனின் கீரீடத்தில் இருந்த தங்க இலை ரூ.4 கோடிக்கு ஏலம்

webteam

மாவீரன் நெப்போலியன் தனது முடிசூட்டு விழாவின் போது அணிந்த கிரீடத்தில் இருந்த ஒரு தங்க இலை ரூ.4 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது.

மாவீரன் நெப்போலியன் 1804 ஆம் ஆண்டு பிரான்ஸ் மன்னனாக முடி சூட்டப்பட்ட போது அவருடைய கிரீடத்தில் இருந்த 6 தங்க இலைகளில், ஒரு இலை எடை காரணமாக அகற்றப்பட்டது. கிரீடத்தை தயாரித்த பொற்கொல்லர் மார்டின் குலாமே, அகற்றப்பட்ட அந்த தங்க இலையை தனது மகளிடம் கொடுத்துள்ளார். அவர் அதை தனது வாரிசுக்கு கொடுக்க, தொடர்ந்து அந்த தங்க இலையை பொற்கொல்லர் குடும்பம் பாதுகாத்து வந்தது.

பொற்கொல்லர் குடும்பம் பாதுகாத்து வந்த தங்க இலை, 1980 ஆம் ஆண்டு சுமார் 52 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது. அதே இலை தற்போது பிரான்ஸ் தலைநகர் பாரீஸ்-ல் மீண்டும் ரூ.4 கோடிக்கு ஏலம் போயுள்ளது. மேலும், மாவீரன் நெப்போலியனின் மனைவி ராணி ஜொஸ்பினின் கிரீடத்தில் இருந்த தங்க இலை 1.15 கோடி ரூபாய்க்கு ஏலம் போயுள்ளது குறிப்பிடத்தக்கது.