உலகம்

கொரோனா தடுப்பூசி வருவதற்குள் இறப்பு எண்ணிக்கை 20 லட்சத்தை எட்டும்: WHO

கொரோனா தடுப்பூசி வருவதற்குள் இறப்பு எண்ணிக்கை 20 லட்சத்தை எட்டும்: WHO

JustinDurai

கொரோனா தடுப்பூசி பயன்பாட்டிற்கு வருவதற்குள் உலகம் முழுவதும் 20 லட்சம் பேர் இறக்கக்கூடும் என கணித்துள்ளது உலக சுகாதார மையம்.

கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பில் 150 நாடுகள் ஈடுபட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் வெற்றிகரமான தடுப்பூசி பரவலாகப் பயன்படுத்தப்படுவதற்கு முன்னர் கொரோனா தொற்றால் உலகளாவிய இறப்பு எண்ணிக்கை 20 லட்சத்தை எட்டக்கூடும்.

மேலும் தொற்றுநோயைத் தடுப்பதற்கான ஒருங்கிணைந்த நடவடிக்கை இல்லையென்றால் இன்னும் அதிகமாக இருக்கலாம் என்று உலக சுகாதார அமைப்பின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா, ரஷ்யா என முன்னணி நாடுகள் பலவும் கொரோனா தடுப்பூசிகளை உருவாக்கி அவற்றை பல கட்டங்களாக மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதித்து கொண்டிருக்கின்றன.

அமெரிக்காவில் அடுத்த ஆண்டு மார்ச் மாத இறுதிக்குள் 7 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் கிடைக்கும். இது 35 கோடி மக்களுக்கு போதுமானதாக இருக்கும் என்று அமெரிக்க நோய்த் தடுப்பு மைய தலைவர் ராபர்ட் ரெட்பீல்ட் கூறியுள்ளார்.

அடுத்த ஆண்டிற்குள் நாட்டில் 100 கோடி டோஸ் தடுப்பூசியை தயாரிக்க இலக்கு வைத்துள்ளதாக  சீனா தெரிவித்துள்ளது.