உலகம்

ஏவுகணை சோதனைக்கு தயாராகுங்கள்: வடகொரிய அதிபர் கிம் உத்தரவு

webteam

அமெரிக்கா மற்றும் தென் கொரியாவின் கூட்டு ராணுவ பயிற்சியை முறியடிக்கும் வகையில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையை நடத்தப் போவதாக வடகொரியா அறிவித்துள்ளது.

ஏற்கெனவே ஜப்பான் வான் வழியே கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை செலுத்தி, அமெரிக்கா மற்றும் தென்கொரியாவுக்கு வடகொரியா மிரட்டல் விடுத்தது. இதனால் கொரிய தீபகற்பத்தில் போர் மேகம் சூழ்ந்துள்ள நிலையில், பசிபிக் பெருங்கடலை குறிவைத்து மீண்டும் ஏவுகணை சோதனைகளை நடத்தும்படி வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவிட்டுள்ளார். அமெரிக்க‌ அதிபர் ட்ரம்பின் எச்சரிக்கையை தொடர்ந்து இம்மாத தொடக்கத்தில் குவாம் அருகே கடல் பகுதியில் நான்கு ஏவுகணைகளை செலுத்தி வடகொரியா மிரட்டல் விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.