உலகம்

இங்கிலாந்தில் தொடங்கியது ஜி7 கூட்டமைப்பு நாடுகளின் மாநாடு

இங்கிலாந்தில் தொடங்கியது ஜி7 கூட்டமைப்பு நாடுகளின் மாநாடு

jagadeesh

ஜி7 கூட்டமைப்பின் 47ஆவது உச்சிமாநாடு இங்கிலாந்தின் கான்வால் மாகாணத்தில் தொடங்கியது.

அமெரிக்கா, இங்கிலாந்து, இத்தாலி, கனடா, ஜப்பான், பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகள் அடங்கியது ஜி7 கூட்டமைப்பு. உலகம் முழுவதும் கொரோனா பரவல் இருக்கும் நிலையில், மீண்டும் சிறப்பாக கட்டமைப்போம் என்ற தலைப்பில் இந்த மாநாடு நடைபெறுகிறது. காணொலி மூலம் பேசி வந்த ஜி7 கூட்டமைப்பின் தலைவர்கள் கடந்த 2 ஆண்டுகளில் முதல்முறையாக நேரில் சந்தித்தனர்.

மாநாட்டின் முதல் நாளில் கொரோனா பரவல், தடுப்பூசி விநியோகம் குறித்து பேசப்பட்டது. தொடர்ந்து பருவநிலை மாற்றம் குறித்து தீவிரமாக விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஜி7 உச்சி மாநாட்டில் இன்றும், நாளையும் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக பங்கேற்கவுள்ளார். ஜி7 கூட்டமைப்புக்கு புதிதாக பொறுப்பேற்றுள்ள இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அழைப்பு விடுத்ததை அடுத்து இந்த மாநாட்டின் அமர்வுகளில் மோடி கலந்து கொள்ளவுள்ளார்.

இந்தியா, ஆஸ்திரேலியா, கொரிய குடியரசு, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகள் ஜி7 உச்சி மாநாட்டிற்கு விருந்தினர்களாக அழைக்கப்பட்டுள்ளன.