ரஷ்யாவிடம் இருந்து தங்கம் இறக்குமதியை தடை செய்ய ஜி 7 நாடுகள் முடிவு செய்துள்ளன. இத்தகவலை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். ஜெர்மனியில் நடந்து வரும் ஜி 7 எனப்படும் வளர்ச்சியடைந்த நாடுகளின் கூட்டத்தில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.
எரிபொருளுக்கு அடுத்தபடியாக தங்கத்தைத்தான் ரஷ்யா அதிகளவில் ஏற்றுமதி செய்து பெருமளவில் அந்நியச்செலாவணியை ஈட்டி வருகிறது. ரஷ்ய தங்கத்திற்கு தடை விதிப்பது மூலம் அந்நாட்டு பொருளாதாரத்தை மேலும் முடக்க அமெரிக்கா உள்ளிட்ட ஜி 7 நாடுகள் திட்டமிட்டுள்ளன.
உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யா மீது அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் பல்வேறு பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன. ரஷ்ய எரிபொருளுக்கு ஐரோப்பிய நாடுகள் தடை விதித்துள்ள நிலையில் அடுத்து தங்கத்திற்கும் தடை விதிக்கப்பட உள்ளது