உலகம்

எதிர்பார்த்ததை விட பைசர் தடுப்பூசிக்கு அதிக ஒவ்வாமை பக்கவிளைவுகள்: அமெரிக்க அதிகாரி

எதிர்பார்த்ததை விட பைசர் தடுப்பூசிக்கு அதிக ஒவ்வாமை பக்கவிளைவுகள்: அமெரிக்க அதிகாரி

Veeramani

ஃபைசரின் கோவிட்-19 தடுப்பூசிக்கு ஒவ்வாமை எதிர்விளைவுகளின் அதிர்வெண், எதிர்பார்ப்பதை விடவும் அதிகமாக உள்ளது என்று அமெரிக்காவின் ஆபரேஷன் வார்ப் ஸ்பீடின் தலைமை அறிவியல் ஆலோசகர் மொன்செஃப் ஸ்லாவி கூறினார்.

அமெரிக்கா கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி வழங்குவதை டிசம்பர் 14 அன்று தொடங்கியது. புதன்கிழமையன்று  ஃபைசர் இன்க் நிறுவனத்துடன், மேலும் 100 மில்லியன் அளவுக்கு கோவிட் -19 தடுப்பூசியின் ஒப்பந்தத்தை அமெரிக்கா பெற்றுள்ள நிலையில், ஒவ்வாமை எதிர்விளைவுகள் குறித்து தடுப்பூசி தயாரிப்பாளர்களுக்கும் தேசிய சுகாதார நிறுவனங்களுக்கும் (என்ஐஎச்) இடையே இது தொடர்பான விவாதங்களைத் தூண்டியுள்ளதாக கூறப்படுகிறது. ஃபைசரின் தடுப்பூசிக்கு ஒவ்வாமை எதிர்விளைவுகளின் அதிர்வெண் எதிர்பார்த்ததை விட அதிகமாக உள்ளது என்று ஆபரேஷன் வார்ப் ஸ்பீடின் தலைமை அறிவியல் ஆலோசகர் டாக்டர் மோன்செஃப் ஸ்லாவி கூறியுள்ளார்.

இங்கிலாந்தின் கட்டுப்பாட்டாளர்கள் ஏற்கெனவே இந்த விவகாரம் தொடர்பாக தெரிவித்த ஆலோசனையின்படி, “குறிப்பிடத்தக்க” ஒவ்வாமை பாதிப்புகளை கொண்டவர்கள் ஃபைசர்-பயோஎன்டெக் கோவிட் -19 தடுப்பூசியைப் பெற வேண்டாம் என்று வலியுறுத்துகின்றனர். இங்கிலாந்தின் மருந்துகள் மற்றும் சுகாதாரப் பொருட்கள் ஒழுங்குமுறை நிறுவனம் (எம்.எச்.ஆர்.ஏ) இரண்டு சுகாதாரப் பணியாளர்கள்  ஒவ்வாமை எதிர்விளைவுகளைச் சந்தித்ததையடுத்து தேசிய சுகாதார சேவைக்கு (என்.எச்.எஸ்) முன்னெச்சரிக்கை ஆலோசனைகளை வழங்கினர். MHRA இன் தலைமை நிர்வாகி டாக்டர் ஜூன் ரெய்ன், இது தொடர்பாக நாடாளுமன்றக் குழுவிடம் சாட்சியம் அளித்தார், அதன்படி ஒவ்வாமை எதிர்விளைவுகள் பற்றி விரிவான மருத்துவ பரிசோதனைகளில் இடம்பெறவில்லை என்பதை அவர் ஒப்புக் கொண்டார்.

உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (எஃப்.டி.ஏ) ஃபைசர்-பயோஎன்டெக்கிற்கு அவசரகால பயன்பாட்டு அங்கீகாரத்தை வழங்கியதை அடுத்து, கொரோனா வைரஸ் நோய்க்கு எதிரான நோய்த்தடுப்பு இயக்கத்தை அமெரிக்கா தொடங்கியது. ஃபைசரின் கோவிட் -19 தடுப்பூசியின் கூடுதல் அளவுகளுக்கான புதிய ஒப்பந்தத்தின் கீழ், அமெரிக்க மருந்து தயாரிப்பாளரும்  பயோஎன்டெக்கும் ஜூன் 30 க்குள் குறைந்தது 70 மில்லியன் டோஸ்களை வழங்குவார்கள், மீதமுள்ள அளவு ஜூலை 31 க்குள் வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.