பிரஞ்சு நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ஒருவர் இத்தாலி கடற்கரையின் வெள்ளை மணலை திருடியதற்காக ரூ.86 ஆயிரம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
இத்தாலி நாடு வெள்ளை மணல்களை கொண்ட கடற்கரைகளுக்கு மிகவும் பெயர் பெற்றது. இந்த வெள்ளை மணல் கடற்கரையை அந்நாடு கடுமையான சட்டத் திட்டங்களுடன் பாதுகாத்து வருகிறது. இந்தக் கடற்கரையில் இருக்கும் வெள்ளை மணலை திருடுபவர்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படும்.
இதையெல்லாம் தெரியாமல் பிரஞ்ச் நாடைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ஒருவர் இத்தாலியின் சர்டினியான் கடற்கரைக்கு வந்துள்ளார். வந்தவர் அங்கிருந்த வெள்ளை மணலை திருடியுள்ளார். இதனையடுத்து அதிகாரிகளிடம் வசமாக மாட்டியவரிடம் இருந்து 2 கிலோ வெள்ளை மணல் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் வெள்ளை மணலை திருடியதற்காக ரூ.86 ஆயிரம் அபராதமாக விதிக்கப்பட்டது.