model image freepik
உலகம்

பள்ளியில் நிர்வாண ஓவியத்தைக் காட்டிய ஆசிரியர்; முகம்சுளித்த குழந்தைகள்.. பிரான்சில் மற்றொரு சம்பவம்!

பிரான்சில், ஆசிரியர் ஒருவர் வகுப்பில் காட்டிய ஓவியத்தால் மாணவர்கள் முகம்சுளித்ததுடன், அவ்விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Prakash J

பிரான்ஸின் பள்ளி ஒன்றில் ஆசிரியர் ஒருவர், 11 முதல் 12 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு ஓவியம் ஒன்றைக் காட்டியுள்ளார். அது, புகழ்பெற்ற ஓவியரான Giuseppe Cesari என்பவர் வரைந்த Diana and Actaeon எனும் ஓவியமாகும். மேலும் அது, 14 முதல் 17ஆம் நூற்றாண்டு காலகட்டத்தில் வரையப்பட்ட புகழ்பெற்ற ஓவியமாகும். இதுதொடர்பாக அவர் வகுப்பும் எடுத்துள்ளார். ஆனால், இந்த ஓவியத்தைப் பார்த்த அந்தக் குழந்தைகள் முகம் சுளித்துள்ளனர். அதற்குக் காரணம், அந்த ஓவியத்தில் இருந்த பெண்கள் ஆடை அணியாமல் இருந்ததுதான். நிர்வாணமாக இருந்த அந்த ஓவியத்தைப் பார்த்த குழந்தைகள் முகம் சுளித்ததுடன் அதிர்ச்சியடைந்துள்ளனர். சிலர், முகத்தை வேறுபக்கம் திருப்பியுள்ளனர்.

எனினும், இந்த சம்பவம் தொடர்பாக சில குழந்தைகள் தங்கள் பெற்றோரிடம் புகாரளித்துள்ளனர். அதன்பேரில் பெற்றோர்கள் பள்ளி நிர்வாகத்தை அணுகி விவரம் கேட்டுள்ளனர். இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இவ்விவகாரம் அந்நாட்டில் புயலைக் கிளப்பியுள்ளது.

ஏனெனில், முன்னதாக 2020ஆம் ஆண்டு, ஆசிரியர் ஒருவர் முகம்மது நபியின் கேலிச்சித்திரங்களை வகுப்பில் காட்டியது தொடர்பாக எழுந்த சர்ச்சையில், அவரது தலையை இளைஞர் ஒருவர் துண்டித்து கொலை செய்தார். இந்தச் சூழலில்தான் தற்போது அடுத்த பிரச்னை எழுந்திருப்பதால், இந்த ஆசிரியரின் உயிருக்கும் ஆபத்து ஏற்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால், ஆசிரியர் வட்டத்தில் அதிர்வலை ஏற்பட்டுள்ளது. அதேநேரத்தில், ஆசிரியர்களுக்கு ஆதரவாக, பிரான்ஸ் கல்வி அமைச்சரான கேப்ரியல் Gabriel Attal குரல் கொடுத்துள்ளார். அவர், ‘சமூக ஊடகங்களில் வதந்திகள் பரப்பும் மற்றும் தவறான குற்றச்சாட்டுகளைக் கூறும் மாணவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.

இதையும் படிக்க: ஷூவில் இடம்பெற்ற வாசகம்.. ஐசிசி எதிர்ப்புக்கு ஆஸ்திரேலிய வீரர் பதில்!

உண்மையில், அந்த ஓவியத்திற்குப் பின்னால் கதை ஒன்று இருப்பதாகக் கூறப்படுகிறது. அதாவது, இளம்பெண்களைப் பாதுகாப்பதற்காக, தன் வாழ்நாள் முழுவதும் கன்னியாகவே வாழ்வது என முடிவு செய்த வனராணியான ஆர்ட்டிமிஸ் என்னும் டயானா, ஒருநாள் தன் தோழிகளுடன் ஆடையில்லாமல் குளித்துக் கொண்டிருக்கிறார். அப்போது வேட்டையாடுவதற்காகக் காட்டுக்குச் சென்ற Actaeon என்ற இளவரசன், அவரது அழகில் மயங்கி நிற்கிறான்.

model image

இதைப் பார்த்த டயானா, ‘நீ என்னைப் பார்த்ததை, உன்னால் யாரிடமும் சொல்லமுடியாமல் போகட்டும்’ என சபிக்கிறார். அதைக் கேட்டு இளவரசன் ஓடுகிறார். ஆனால், அவருக்கு, தாம் நான்கு கால்களில் ஓடுகிறோம் எனத் தெரியவில்லை. ஆம், டயானாவின் சாபத்தால் அந்த இளவரசன் ஒரு மிருகமாக மாறி ஓடிக் கொண்டிருப்பதாகக் கதையில் கூறப்பட்டுள்ளது. பின்னர் மிருகமான அந்த இளவரசனை வேட்டை நாய்கள் பாய்ந்து, கொன்று குவித்துவிடுவதாக கதை முடிகிறது.

இதையும் படிக்க: மக்களவையில் ஊடுருவிய இருவர்.. மடக்கிப்பிடித்த எம்.பி.க்கள்... பரபரப்புக்கு மத்தியில் நடந்தது என்ன?