உலகம்

மியான்மரில் இனப்படுகொலை:பிரான்ஸ் அதிபர் குற்றச்சாட்டு

மியான்மரில் இனப்படுகொலை:பிரான்ஸ் அதிபர் குற்றச்சாட்டு

webteam

மியான்மரில் ரோஹிங்யா இஸ்லாமியர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டு வருவதாக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார்.

ரோஹிங்யா இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் ராகினே மாகாணத்தில் கடந்த ஆகஸ்ட் 25 ஆம் தேதி முதல் வன்முறை நீடித்து வருகிறது. வீடுகளுக்கு மியான்மர் ராணுவம் தீ வைத்து வருவதால், உயிருக்கு பயந்து இதுவரை 4 லட்சத்துக்கும் மேற்பட்ட ரோஹிங்யா இஸ்லாமியர்கள் வங்கதேசத்தில் அடைக்கலம் புகுந்துள்ளனர்.

மியான்மர் அரசின் இந்த அடக்குமுறைக்கு எதிராக சர்வதேச நாடுகள் குரல் கொடுத்து வருவதைத் தொடர்ந்து, தற்போது அங்கு வன்முறை குறைந்திருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஐ.நா. பொது அவை கூட்டத்தில் இந்த விவகாரம் குறித்து பேசிய பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன், மியான்மரில் சிறுபான்மை இனத்தவர்களாக வசித்து வரும் ரோஹிங்யா இஸ்லாமியர்கள் மீதான தாக்குதல்கள், இனப் படுகொலையாகவே தெரிகிறது என பகிரங்கமாக குற்றம்சாட்டினார். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் உள்ள பிற உறுப்பு நாடுகளுடன் இணைந்து இந்தப் பிரச்னைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்த அவர், மியான்மர் ராணுவம் உடனடியாக தாக்குதல்களை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.