உலகம்

ஆர்டர் செய்ததோ பூனைக்குட்டி.. வந்து சேர்ந்ததோ புலிக்குட்டி: தம்பதியின் ‘ஷாக்’ அனுபவம் !

ஆர்டர் செய்ததோ பூனைக்குட்டி.. வந்து சேர்ந்ததோ புலிக்குட்டி: தம்பதியின் ‘ஷாக்’ அனுபவம் !

jagadeesh

பூனைக் குட்டியை வளர்க்க ஆசைப்பட்டு தவறுதலாக புலிக் குட்டியை பிரான்ஸ் நாட்டு தம்பதியினர் வாங்கியுள்ளனர்.

பிரான்ஸ் நாட்டின் லே ஹாவ்ரே நகரைச் சேர்ந்த தம்பதியினருக்கு அழகான பூனைக் குட்டிகளை வளர்ப்பதில் கொள்ளை ஆர்வம். அந்த வகையில் ஆப்பிரிக்கா நாட்டின் மிகவும் பிரபலமான சவானா வகை பூனைக் குட்டியை வாங்க ஆசைப்பட்டுள்ளனர். இதனையடுத்து ஆன்லைனில் சவானா பூனைக் குட்டியை விற்கும் விளம்பரத்தை பார்த்துள்ளனர்.

இதனையடுத்து சுமார் 6 ஆயிரம் யூரோக்களை ஆன்லைனிலேயே செலுத்தி சவானா பூனைக் குட்டியை ஆர்டர் செய்தனர். இதனையடுத்து சவானா பூனைக்குட்டியும் தம்பதியினர் வீட்டுக்கு வந்து சேர்ந்தது. அதனுடன் மகிழ்ச்சியாக தம்பதியினர் நேரத்தை செலவிட்டனர். இந்நிலையில் நாளடைவில் பூனையின் நடவடிக்கைகளில் மாற்றம் தெரிந்தது. இதனால் தம்பதியினர் சந்தேகம் அடைந்தனர்.

உடனடியாக போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து போலீஸாருடன் விலங்கியல் நிபுணர்கள் மேற்கொண்ட சோதனையில் அது பூனைக் குட்டியல்ல சுமத்ரன் வகை புலிக்குட்டி என தெரிவித்தனர். இதனால் தம்பதியினர் அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து தம்பதியிரடம் இருந்து புலிக் குட்டி மீட்கப்பட்டு வன உயிரியல் காப்பகத்துக்கு அனுப்பப்பட்டது.