உலகம்

பிரான்ஸ் அதிபரும் மனைவி பிரிகெட்டியும்.... வித்தியாசமான ஜோடி

பிரான்ஸ் அதிபரும் மனைவி பிரிகெட்டியும்.... வித்தியாசமான ஜோடி

webteam

பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரோனின் மனைவி பிரிகெட்டி ட்ராக்னோ உடலை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வர்ணித்துப் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேக்ரோனும் பிரிகெட்டியும் ஒரு வித்தியாசமான தம்பதி. இருவருக்கும் வயது வித்தியாசம் 25. மூத்தவர் மேக்ரோன் இல்லை. மனைவி பிரிகெட்டிதான்.

பிரிகெட்டி ட்ராக்னோ, மேக்ரோனின் பள்ளிக்கூட ஆசிரியை. மேக்ரோனைவிட 25 வயது மூத்தவர். 1993-ஆம் ஆண்டில் 15 வயதில் ட்ராக்னோவுடன் பழகத் தொடங்கிய மேக்ரோன் 18 வயதை அடைந்த பிறகு மணம் முடிக்கத் திட்டமிட்டார். மேக்ரோனின் பெற்றோர் அவர்கள் இருவரையும் பிரித்துவிடுவதற்கு எவ்வளவோ முயன்றார்கள். ஆனால் திருமணத்தில் மேக்ரன் உறுதியாக இருந்தார். கடந்த 2007-ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள். இப்போது மேக்ரனுக்கு வயது 39. ட்ராக்னோவின் வயது 64. மேக்ரோனின் அதிபர் தேர்தல் பரப்புரை முழுவதும் வழிகாட்டியாக திகழ்ந்த ட்ராக்னோ, ஊடகங்களில் அதிகமாகப் பேசப்படும் நபரானார். மேக்ரோன் அதிபரான பிறகு, உலக நாடுகளிலேயே மிகவும் மாறுபட்ட முதல் பெண்மணியாகவும் அறியப்படுகிறார்

திடீரென அரசியலுக்குள் நுழைந்து, உலகின் வல்லரசு நாடுகளுள் ஒன்றான பிரான்ஸின் அதிபர் பதவியை அடைந்திருக்கும் இமானுவல் மேக்ரோன் எல்லா வகையிலும் புதுமையானவர். அறுபது ஆண்டுகளில் இடது, வலது என மாறிமாறி அதிபர்களைப் பார்த்த பிரான்ஸுக்கு அறிமுகமாகியிருக்கும் இவர், ஒரு மையவாதி. அரசியலில் மாத்திரமல்ல. திருமணத்திலும், துணையைத் தேடுவதிலும் புதுமையைக் கையாண்டவர் மேக்ரோன்.